• May 13 2026

டீசலின் செலவு உயர்ந்துள்ளது; ஆனால் நீங்கள் கொடுப்பது 392 மட்டுமே! ஜனாதிபதி விளக்கம்

Aathira / May 13th 2026, 5:59 pm
image

இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு லீட்டர் டீசலுக்கும் 100 ரூபாய் மானியம் வழங்கி வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்த மானியம் நீண்ட காலம் தொடர முடியாது என்று தெளிவாக எச்சரித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் ஒரு லீட்டர் டீசலின் உண்மையான செலவு 720 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

ஆனால் மக்கள் செலுத்துவது 392 ரூபாய் மட்டுமே. இடைவெளியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு வருகிறது. இதனால் இலங்கை பெட்டோலிய கூட்டுத்தாபனம் பாரிய நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

விலையை உயர்த்துவதை விட எரிபொருள் நுகர்வையே குறைப்பதே தங்களின் பிரதான நோக்கம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

 எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் மட்டுமே நீண்ட காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் என்று விளக்கமளித்தார். 

டீசலின் செலவு உயர்ந்துள்ளது; ஆனால் நீங்கள் கொடுப்பது 392 மட்டுமே ஜனாதிபதி விளக்கம் இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு லீட்டர் டீசலுக்கும் 100 ரூபாய் மானியம் வழங்கி வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளிப்படையாக தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்த மானியம் நீண்ட காலம் தொடர முடியாது என்று தெளிவாக எச்சரித்துள்ளார்.உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் ஒரு லீட்டர் டீசலின் உண்மையான செலவு 720 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால் மக்கள் செலுத்துவது 392 ரூபாய் மட்டுமே. இடைவெளியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு வருகிறது. இதனால் இலங்கை பெட்டோலிய கூட்டுத்தாபனம் பாரிய நஷ்டத்தை சந்தித்து வருகிறது.விலையை உயர்த்துவதை விட எரிபொருள் நுகர்வையே குறைப்பதே தங்களின் பிரதான நோக்கம் என ஜனாதிபதி தெரிவித்தார். எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் மட்டுமே நீண்ட காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் என்று விளக்கமளித்தார். 

Advertisement

Advertisement

Advertisement