கடந்த வருட நிலவரத்தின் அடிப்படையில் நாட்டின் சுற்றுலா வருமானமாக 3.17 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 53.2 சதவீத வளர்ச்சியாகும் என இலங்கை மத்திய வங்கியின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2023ஆம் ஆண்டு சுற்றுலா வருமானமானது 2.0 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியிருந்தது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு 20 இலட்சத்து 53,465 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்.
அதேவேளை, இவ்வருடம் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன் அதன் மூலம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டின் சுற்றுலா வருமானமாக 3.17 பில்லியன் அமெரிக்க டொலர் பதிவு. கடந்த வருட நிலவரத்தின் அடிப்படையில் நாட்டின் சுற்றுலா வருமானமாக 3.17 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 53.2 சதவீத வளர்ச்சியாகும் என இலங்கை மத்திய வங்கியின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023ஆம் ஆண்டு சுற்றுலா வருமானமானது 2.0 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியிருந்தது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு 20 இலட்சத்து 53,465 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்தனர். அதேவேளை, இவ்வருடம் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன் அதன் மூலம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.