மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதை தடுக்கும் வகையில் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்குகள் இன்று (30) மீள அழைக்கப்பட்டதை அடுத்து கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதானவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து தம்மை தன்னிச்சையாக நீக்குவதற்கு எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என மனுதாரர்களான லசந்த அழகியவண்ண, துமிந்த திஸாநாயக்க மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அந்த தீர்மானங்களை செல்லுபடியாகாத தீர்மானத்தை கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவர்கள் இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மைத்திரி உள்ளிட்ட சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு. மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதை தடுக்கும் வகையில் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்குகள் இன்று (30) மீள அழைக்கப்பட்டதை அடுத்து கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதானவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து தம்மை தன்னிச்சையாக நீக்குவதற்கு எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என மனுதாரர்களான லசந்த அழகியவண்ண, துமிந்த திஸாநாயக்க மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் தெரிவித்துள்ளனர்.அந்த தீர்மானங்களை செல்லுபடியாகாத தீர்மானத்தை கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவர்கள் இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.