தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே, மனைவி மற்றொருவருடன் சென்ற ஆத்திரத்தில் தன் மூன்று குழந்தைகளையும் கழுத்தறுத்து கொலை செய்த தந்தை ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த மூன்று பிள்ளைகளின் தந்தை, மதுக்கூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சர்வராக பணியாற்றி உள்ளார்.
அவரது மனைவி மற்றும் குழந்தைகளான 12 , 8 வயதுடைய பெண் பிள்ளைகளும், 5 வயதுடைய ஆண் பிள்ளை ஒன்றுடனும் சுமூகமாக வாழ்க்கையை நடாத்தி வந்துள்ளார்.
எனினும், மனைவி சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவழிப்பதை கணவர் விரும்பவில்லை.
குடும்ப வாழ்க்கை நன்றாக இருந்த போதிலும், மனைவியின் சமூக வலைதள ஆர்வத்தால் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ளன.
ஒருகட்டத்தில் மனைவிக்கு மன்னார்குடி பகுதியில் உள்ள ஒருவருடன் தவறான தொடர்பு உண்டென தெரிய வந்துள்ளது.
இதனால் சண்டைகளை தொடரவே, மனைவி தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வேறு இடம் சென்றுள்ளார்.
இதை தொடர்ந்து மதுபோதைக்கு அடிமையாகிய கணவர், மனைவி மீதுள்ள கோவத்தினால் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் குடிபோதையில் வீட்டிற்கு வந்தவர், தனது மகள்களை வெளியே சென்று விளையாடுமாறு தெரிவித்துள்ளார்.
பிறகு தனது மகனை தூக்கி கொஞ்சுவது போல் நடித்து, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இதில் ரத்தவெள்ளத்தில் துடித்து குழந்தை இறந்துள்ளது.
பின்னர் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த தனது இரண்டு மகள்களையும் வீட்டிற்குள் அழைத்து அதே முறையில் கொலை செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த 3 குழந்தைகளின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று பிள்ளைகளையும் துடிக்க துடிக்க கொன்ற கொடூர தந்தை. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே, மனைவி மற்றொருவருடன் சென்ற ஆத்திரத்தில் தன் மூன்று குழந்தைகளையும் கழுத்தறுத்து கொலை செய்த தந்தை ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குறித்த மூன்று பிள்ளைகளின் தந்தை, மதுக்கூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சர்வராக பணியாற்றி உள்ளார்.அவரது மனைவி மற்றும் குழந்தைகளான 12 , 8 வயதுடைய பெண் பிள்ளைகளும், 5 வயதுடைய ஆண் பிள்ளை ஒன்றுடனும் சுமூகமாக வாழ்க்கையை நடாத்தி வந்துள்ளார்.எனினும், மனைவி சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவழிப்பதை கணவர் விரும்பவில்லை.குடும்ப வாழ்க்கை நன்றாக இருந்த போதிலும், மனைவியின் சமூக வலைதள ஆர்வத்தால் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ளன. ஒருகட்டத்தில் மனைவிக்கு மன்னார்குடி பகுதியில் உள்ள ஒருவருடன் தவறான தொடர்பு உண்டென தெரிய வந்துள்ளது.இதனால் சண்டைகளை தொடரவே, மனைவி தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வேறு இடம் சென்றுள்ளார்.இதை தொடர்ந்து மதுபோதைக்கு அடிமையாகிய கணவர், மனைவி மீதுள்ள கோவத்தினால் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி உள்ளார்.இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் குடிபோதையில் வீட்டிற்கு வந்தவர், தனது மகள்களை வெளியே சென்று விளையாடுமாறு தெரிவித்துள்ளார். பிறகு தனது மகனை தூக்கி கொஞ்சுவது போல் நடித்து, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.இதில் ரத்தவெள்ளத்தில் துடித்து குழந்தை இறந்துள்ளது. பின்னர் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த தனது இரண்டு மகள்களையும் வீட்டிற்குள் அழைத்து அதே முறையில் கொலை செய்துள்ளார்.இதன்பிறகு வீட்டிலிருந்து புறப்பட்ட சந்தேக நபரான கணவர், மதுக்கூர் போலீசில் சரணடைந்து நடந்த விஷயங்களை தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த 3 குழந்தைகளின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.