• Apr 23 2026

காதலனை கட்டி போட்டு தீ வைத்து கொன்ற கொடூரக் காதலி

Chithra / Apr 23rd 2026, 9:15 pm
image

பெங்களூருவில் மேற்கத்திய பாணியில் காதலை வெளிப்படுத்துவதாக கூறி காதலனை எங்கும் நகர்ந்து செல்ல முடியாதபடி கட்டி வைத்து, தீ வைத்து எரித்து கொன்று கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்


27 வயதான பிரேமா என்ற பெண், 27 வயதான கிரண் என்பவருடன் 2 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்துள்ளார். 


இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், சமீப காலமாக அந்த இளைஞன் உறவில் ஆர்வம் இழந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரேமாவுக்கு கோபமும் பழிவாங்கும் எண்ணமும் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த நிலையில் தனது தாயும், சகோதரனும் வெளியே செந்திருந்த நேரம் பார்த்து காதலன் கிரணை வீட்டிற்கு வருமாறு அழைத்து உள்ளார். 


கிரண் அங்கு சென்ற பின், அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க போவதாக கூறி கிரணின் கண்களை முதலில் கட்டி, ஒரு நாற்காலியில் அமர வைத்துள்ளார். பின்னர் அவரை கயிற்றால் நாற்காலியுடன் நன்கு பிணைத்து கட்டியுள்ளார். 


எதற்கு இப்படி செய்கிறாய் என்று கிரண் கேள்வி எழுப்பிய போது, மேற்கத்திய பாணியில் காதல் சர்ப்ரைஸ் கொடுக்க போவதாக கூறி உள்ளார். 


இதனை முற்றிலும் உண்மை என நம்பிய கிரண், காதலி பிரேமா செய்ய சொன்ன நடவடிக்கைகளுக்கு முரண்டு பிடிக்காமல் ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறார். 


பின்னர் எதிர்பாரா விதமாக நாற்காலியில் கட்டி வைத்த காதலன் கிரண் மீது தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து உள்ளார்.


இதில் உடல் கருகிய கிரண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 


சம்பவம் குறித்து  பொலிஸார் விசாரணை தொடங்கி, பிரேமாவை கைது செய்துள்ளனர்.


மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய வீடியோக்கள் அவரது தொலைபேசியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.


சமீபகாலமாக கிரண் தனக்குப் போதுமான கவனம் கொடுக்கவில்லை என்றும், தன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்று தனக்கு உள்ளுணர்வு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் இப்படி ஒரு காரியத்தில் ஈடுபட்டதாகவும் பிரேமா கூறியுள்ளார். 


இந்நிலையில் காதலனை வீட்டிற்கு வரவழைத்து திட்டமிட்டு கொடூரமாக காதலியே எரித்து கொன்றுள்ள சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


காதலனை கட்டி போட்டு தீ வைத்து கொன்ற கொடூரக் காதலி பெங்களூருவில் மேற்கத்திய பாணியில் காதலை வெளிப்படுத்துவதாக கூறி காதலனை எங்கும் நகர்ந்து செல்ல முடியாதபடி கட்டி வைத்து, தீ வைத்து எரித்து கொன்று கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்27 வயதான பிரேமா என்ற பெண், 27 வயதான கிரண் என்பவருடன் 2 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்துள்ளார். இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், சமீப காலமாக அந்த இளைஞன் உறவில் ஆர்வம் இழந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரேமாவுக்கு கோபமும் பழிவாங்கும் எண்ணமும் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த நிலையில் தனது தாயும், சகோதரனும் வெளியே செந்திருந்த நேரம் பார்த்து காதலன் கிரணை வீட்டிற்கு வருமாறு அழைத்து உள்ளார். கிரண் அங்கு சென்ற பின், அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க போவதாக கூறி கிரணின் கண்களை முதலில் கட்டி, ஒரு நாற்காலியில் அமர வைத்துள்ளார். பின்னர் அவரை கயிற்றால் நாற்காலியுடன் நன்கு பிணைத்து கட்டியுள்ளார். எதற்கு இப்படி செய்கிறாய் என்று கிரண் கேள்வி எழுப்பிய போது, மேற்கத்திய பாணியில் காதல் சர்ப்ரைஸ் கொடுக்க போவதாக கூறி உள்ளார். இதனை முற்றிலும் உண்மை என நம்பிய கிரண், காதலி பிரேமா செய்ய சொன்ன நடவடிக்கைகளுக்கு முரண்டு பிடிக்காமல் ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறார். பின்னர் எதிர்பாரா விதமாக நாற்காலியில் கட்டி வைத்த காதலன் கிரண் மீது தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து உள்ளார்.இதில் உடல் கருகிய கிரண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து  பொலிஸார் விசாரணை தொடங்கி, பிரேமாவை கைது செய்துள்ளனர்.மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய வீடியோக்கள் அவரது தொலைபேசியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.சமீபகாலமாக கிரண் தனக்குப் போதுமான கவனம் கொடுக்கவில்லை என்றும், தன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்று தனக்கு உள்ளுணர்வு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் இப்படி ஒரு காரியத்தில் ஈடுபட்டதாகவும் பிரேமா கூறியுள்ளார். இந்நிலையில் காதலனை வீட்டிற்கு வரவழைத்து திட்டமிட்டு கொடூரமாக காதலியே எரித்து கொன்றுள்ள சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement