• May 31 2026

10 நாய்களை விஷம் வைத்து கொன்ற கொடூரம் - இலங்கையில் மரணித்த மனிதாபிமானம்

Chithra / Apr 21st 2026, 12:57 pm
image

அநுராதபுரம் - கலாவெவ  பகுதியில் நேற்று 10 நாய்களுக்கு விஷம் கொடுத்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பொலிஸார் உத்தியோகபூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்ற போதிலும், நாய்களின் இறப்பிற்கான முழுமையான பின்னணியைக் கண்டறிய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


இந்தச் செயலைக் கடுமையாகக் கண்டித்துள்ள விலங்கு உரிமைக் குழுக்கள், விலங்கு வதைக்கு எதிரான சட்டங்களை மிகக் கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பானவர்களைத் தாமதமின்றி நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.


சட்ட நடவடிக்கைகள் நிறைவடையும் வரை விசாரணைகளைக் கூர்ந்து கவனித்து, சட்ட அமுலாக்கப் பிரிவினருடன் இணைந்து செயற்படப் போவதாக விலங்கு நலக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


மேலும் இந்த வியடம் குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அப்பாவி விலங்குகளுக்கு எதிரான இந்த கொடூரமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலுக்கு எதிராக அவசர சட்ட நடவடிக்கை எடுக்குமாறு  விலங்கு நலக் கூட்டமைப்பு உறுப்பினர் மிஹிரி சிறிவர்தன அதிகாரிகளை வலியுறுத்தினார்.


10 நாய்களை விஷம் வைத்து கொன்ற கொடூரம் - இலங்கையில் மரணித்த மனிதாபிமானம் அநுராதபுரம் - கலாவெவ  பகுதியில் நேற்று 10 நாய்களுக்கு விஷம் கொடுத்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பொலிஸார் உத்தியோகபூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்ற போதிலும், நாய்களின் இறப்பிற்கான முழுமையான பின்னணியைக் கண்டறிய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்தச் செயலைக் கடுமையாகக் கண்டித்துள்ள விலங்கு உரிமைக் குழுக்கள், விலங்கு வதைக்கு எதிரான சட்டங்களை மிகக் கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பானவர்களைத் தாமதமின்றி நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.சட்ட நடவடிக்கைகள் நிறைவடையும் வரை விசாரணைகளைக் கூர்ந்து கவனித்து, சட்ட அமுலாக்கப் பிரிவினருடன் இணைந்து செயற்படப் போவதாக விலங்கு நலக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.மேலும் இந்த வியடம் குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.அப்பாவி விலங்குகளுக்கு எதிரான இந்த கொடூரமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலுக்கு எதிராக அவசர சட்ட நடவடிக்கை எடுக்குமாறு  விலங்கு நலக் கூட்டமைப்பு உறுப்பினர் மிஹிரி சிறிவர்தன அதிகாரிகளை வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement