ஏழை மக்களின் சாபமே கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக இருக்க விடவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்றையதினம் (8) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அன்று நாங்கள் பட்ட கஷ்டத்தை கேட்டுதான் அன்று அவரின் வீட்டின் முன்னால் நாங்கள் நியாயம் கேட்டோம். எங்களிற்கு எந்த ஜாதி வாதமும் இல்லை. கஷ்டப்பட்டே நாங்கள் அதற்கு தீர்வு கேட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் , அரசியலிற்கு வருபவர்கள் அது குறித்து எதுமே தெரியாது நகைச்சுவையாகியுள்ளது.
அதேவேளை இலங்கை அரசியலில் மகளிர்களின் பங்கேற்பு குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. எனவே பெண்ணை பற்றி தீர்வு எடுப்பது ஒரு ஆண்தான். அந்த நிலைமை மாற வேண்டும்
நான் 26 வயதில் தேர்தலில் போட்டியிட்டேன். முதலில் இருந்த கட்சியில் பெண் என என்னை பொருட்டாக மதிக்கவில்லை. அதேபோல அடுத்த கட்சியில் பெண்கள் இருந்தும் கண்டுகொள்ளவில்லை.
தற்போது உள்ள கட்சியில் நான் வந்ததிலிருந்து பெண்களை மதிக்கின்றனர். அத்துடன் பல சேவைகள் செய்து வருகிறேன். இவ்வாறான தலைவர்தான் நாட்டிற்கு தேவை.
மகளிர் முன்வராமல் இருக்க மற்றுமொறு காரணம் உரிய பயிற்சி இல்லை. எனவே உரிய கல்வி நடவடிக்கைகள் வழங்கினால் அதாவது தையல், பூ வளர்த்தல் என பல துறைகளில் பயிற்சிகளை வழங்கினால் பெண்கள் பல துறைகளில் சாதனை படைப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டபாயவுக்கு ஏற்பட்ட நிலைக்கு ஏழை மக்களின் சாபமே காரணம். ஹிருணிகா சுட்டிக்காட்டு. ஏழை மக்களின் சாபமே கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக இருக்க விடவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்றையதினம் (8) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,அன்று நாங்கள் பட்ட கஷ்டத்தை கேட்டுதான் அன்று அவரின் வீட்டின் முன்னால் நாங்கள் நியாயம் கேட்டோம். எங்களிற்கு எந்த ஜாதி வாதமும் இல்லை. கஷ்டப்பட்டே நாங்கள் அதற்கு தீர்வு கேட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.மேலும் , அரசியலிற்கு வருபவர்கள் அது குறித்து எதுமே தெரியாது நகைச்சுவையாகியுள்ளது. அதேவேளை இலங்கை அரசியலில் மகளிர்களின் பங்கேற்பு குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. எனவே பெண்ணை பற்றி தீர்வு எடுப்பது ஒரு ஆண்தான். அந்த நிலைமை மாற வேண்டும் நான் 26 வயதில் தேர்தலில் போட்டியிட்டேன். முதலில் இருந்த கட்சியில் பெண் என என்னை பொருட்டாக மதிக்கவில்லை. அதேபோல அடுத்த கட்சியில் பெண்கள் இருந்தும் கண்டுகொள்ளவில்லை.தற்போது உள்ள கட்சியில் நான் வந்ததிலிருந்து பெண்களை மதிக்கின்றனர். அத்துடன் பல சேவைகள் செய்து வருகிறேன். இவ்வாறான தலைவர்தான் நாட்டிற்கு தேவை. மகளிர் முன்வராமல் இருக்க மற்றுமொறு காரணம் உரிய பயிற்சி இல்லை. எனவே உரிய கல்வி நடவடிக்கைகள் வழங்கினால் அதாவது தையல், பூ வளர்த்தல் என பல துறைகளில் பயிற்சிகளை வழங்கினால் பெண்கள் பல துறைகளில் சாதனை படைப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.