• Apr 30 2026

ஈரானிடம் அணு ஆயுதம் இல்லையென்றால் மட்டுமே ஒப்பந்தம்! ட்ரம்ப் அதிரடி நிபந்தனை

Chithra / Apr 30th 2026, 8:44 am
image

பாகிஸ்தானுக்குச் சென்று நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குப் பதிலாக, தற்போது தொலைபேசி ஊடாகவே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


ஒவ்வொரு முறையும் ஒரு காகிதத்தைப் பார்ப்பதற்காக 18 மணிநேரம் வானூர்தியில் பறப்பது தேவையற்றது என தெரிவித்த அவர், தொலைபேசி வழியாகவே பேசி வருவது, மிகவும் வசதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதன்படி, ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் நீண்ட தூரம் கடந்து வந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனினும், அந்தப் பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த முடிவைத் தருமா? என்பதே தற்போதைய கேள்வி எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.


அத்துடன் "ஈரானிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளும் வரை, எந்தவித உடன்படிக்கையும் எட்டப்படாது" என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


இதற்கு முன்னர் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நேரடிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.ஆனால், தற்போது நிலவும் பதற்றமான சூழலில், இராஜதந்திர தொடர்புகள் தொலைபேசி வாயிலாகவே தொடர்கின்றன.


அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகளால் ஈரான் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், இந்தத் தொலைபேசி உரையாடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.


இதேவேளை ஈரானின் கடற்படை, வான் படை மற்றும் வான் பாதுகாப்பு கட்டமைப்புகளை அமெரிக்கா முற்றாக அழித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


 "ஈரானிடம் தற்போது மிகக் குறைந்த அளவிலான இராணுவ பலமே எஞ்சியுள்ளது. அவர்களிடம் மிகச்சிறிய அளவிலான ஏவுகணைகளே உள்ளன" என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.


அத்துடன் ஈரானின் ஏவுகணை உற்பத்தி நிலையங்களில் சுமார் 80 சதவீதமானவை அழிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் ஈரானின் வலிமையைக் கணிசமாகக் குறைத்துள்ளதாக ட்ரம்ப் இதன்போது சுட்டிக்காட்டினார்.


ஈரானிடம் அணு ஆயுதம் இல்லையென்றால் மட்டுமே ஒப்பந்தம் ட்ரம்ப் அதிரடி நிபந்தனை பாகிஸ்தானுக்குச் சென்று நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குப் பதிலாக, தற்போது தொலைபேசி ஊடாகவே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு முறையும் ஒரு காகிதத்தைப் பார்ப்பதற்காக 18 மணிநேரம் வானூர்தியில் பறப்பது தேவையற்றது என தெரிவித்த அவர், தொலைபேசி வழியாகவே பேசி வருவது, மிகவும் வசதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்படி, ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் நீண்ட தூரம் கடந்து வந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனினும், அந்தப் பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த முடிவைத் தருமா என்பதே தற்போதைய கேள்வி எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.அத்துடன் "ஈரானிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளும் வரை, எந்தவித உடன்படிக்கையும் எட்டப்படாது" என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.இதற்கு முன்னர் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நேரடிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.ஆனால், தற்போது நிலவும் பதற்றமான சூழலில், இராஜதந்திர தொடர்புகள் தொலைபேசி வாயிலாகவே தொடர்கின்றன.அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகளால் ஈரான் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், இந்தத் தொலைபேசி உரையாடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.இதேவேளை ஈரானின் கடற்படை, வான் படை மற்றும் வான் பாதுகாப்பு கட்டமைப்புகளை அமெரிக்கா முற்றாக அழித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். "ஈரானிடம் தற்போது மிகக் குறைந்த அளவிலான இராணுவ பலமே எஞ்சியுள்ளது. அவர்களிடம் மிகச்சிறிய அளவிலான ஏவுகணைகளே உள்ளன" என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.அத்துடன் ஈரானின் ஏவுகணை உற்பத்தி நிலையங்களில் சுமார் 80 சதவீதமானவை அழிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் ஈரானின் வலிமையைக் கணிசமாகக் குறைத்துள்ளதாக ட்ரம்ப் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement