• Nov 22 2024

சுற்றாடலுக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் தீர்மானமிக்க பொறுப்புக்கள் இளம் சமூகத்தினரை சார்ந்துள்ளது- சாகல ரத்நாயக்க தெரிவிப்பு! Samugammedia

Tamil nila / Dec 21st 2023, 8:03 pm
image

சுற்றாடல் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் தீர்மானமிக்க பொறுப்புக்கள் இளம் சமூகத்தினரை சார்ந்துள்ளதென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். 


உலகளாவிய காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்காக இலங்கை முன்நின்று செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், சுற்றாடலுக்காக இளம் சமூகத்தினரின் அர்பணிப்புக்களையும் பாராட்டினார். 

இளம் தலைவர்களைப் பாராட்டுவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (20) நடைபெற்ற நிகழ்விலேயே தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இந்நிகழ்வானது பல்வேறு துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்திய இளம் தலைவர்கள் பாராட்டுவதற்காக லியோ கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் மாணவத் தலைவர்கள் மற்றும் உப மாணவத் தலைவர்கள், சர்வதேச லியோ கழகத்தின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் திறமைகளும் பாராட்டப்பட்டது.

இங்கு சிறப்புரை ஆற்றிய சாகல ரத்நாயக்க, சமூக பணிகளின் போது இளம் சமூகத்தினரின் பங்களிப்பு முன்னைய காலம் தொடக்கம் தற்காலம் வரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  

சுற்றாடலுக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் போது இளம் சமூகத்தினரை சார்ந்திருக்கும் பொறுப்புகள் தொடர்பில் அறிவுறுத்திய அவர், தற்காலத்தில் சுற்றாடலுக்கான இளைஞர்களின் அர்பணிப்பையும் பாராட்டினார். அத்தோடு உலகளாவிய காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்காக இலங்கை முன்நின்று செயற்பட வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தினார். 

மீள்புதுப்பிக்கத் தக்க வலுசக்தி துறைக்குள் இலங்கையின் கொள்ளளவு தொடர்பில் சுட்டிகாட்டிய அவர் பசுமை மற்றும் நவீன பொருளாதாரத்திற்கான ஜனாதிபதியின் தெரிவு தொடர்பிலும் விளக்கமளித்தார். நெருக்கடி நிலையிலிருந்து மீள எழுவதற்கான முயற்சிகளின் போது முகம்கொடுக்க நேர்ந்த சவால்களைப் போன்று நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அதரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படும் என்றும் தெரிவித்தார்.   

நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக இளைஞர் யுவதிகள் முன்னெடுக்கும் பணிகள் தொடர்பில் நினைவுகூர்ந்த அவர், அதற்கான ஒத்துழைப்புக்களுக்காகவும் நன்றி தெரிவித்தார். மேலும் சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு நிலையான ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். 

நிகழ்வை ஏற்பாடு செய்வதமைக்காக பினூஜ அமரநாயக்க உள்ளிட்ட லியோ கழகத்தினருக்கு நன்றி கூறியதோடு, எதிர்காலத்தில் இளைஞர் யுவதிகளுக்கு இது போன்ற வாய்ப்புக்கள் அதிகளவில் உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். 

அதேபோல் நாட்டின் முன்னேற்றத்துக்காக இளைஞர் யுவதிகளின் பங்களிப்பை நேரடியாக பெற்றுத்தரும் லியோ கழகம் போன்ற வேலைத்திட்டங்களை ஊக்குவிக்கின்றமைக்காக பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட கல்வித்துறைனருக்கும் பாராட்டு தெரிவித்தார். 

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் /  பணிப்பாளர் பசிந்து குணரத்ன, சர்வதேச லியோ கழகத்தின் செயற்றிட்ட ஆலோசகர் லசந்த குணவர்தன, அதிபர்கள், பிரதி அதிபர்கள், நிறைவேற்று ஆலோசகர்கள், லியோ கழகத்தின் ஆலோசகர்கள், பாடசாலைகளின் மாணவத் தலைவர்கள் உள்ளிட்டவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். 




சுற்றாடலுக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் தீர்மானமிக்க பொறுப்புக்கள் இளம் சமூகத்தினரை சார்ந்துள்ளது- சாகல ரத்நாயக்க தெரிவிப்பு Samugammedia சுற்றாடல் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் தீர்மானமிக்க பொறுப்புக்கள் இளம் சமூகத்தினரை சார்ந்துள்ளதென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். உலகளாவிய காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்காக இலங்கை முன்நின்று செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், சுற்றாடலுக்காக இளம் சமூகத்தினரின் அர்பணிப்புக்களையும் பாராட்டினார். இளம் தலைவர்களைப் பாராட்டுவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (20) நடைபெற்ற நிகழ்விலேயே தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.  இந்நிகழ்வானது பல்வேறு துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்திய இளம் தலைவர்கள் பாராட்டுவதற்காக லியோ கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் மாணவத் தலைவர்கள் மற்றும் உப மாணவத் தலைவர்கள், சர்வதேச லியோ கழகத்தின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் திறமைகளும் பாராட்டப்பட்டது.இங்கு சிறப்புரை ஆற்றிய சாகல ரத்நாயக்க, சமூக பணிகளின் போது இளம் சமூகத்தினரின் பங்களிப்பு முன்னைய காலம் தொடக்கம் தற்காலம் வரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  சுற்றாடலுக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் போது இளம் சமூகத்தினரை சார்ந்திருக்கும் பொறுப்புகள் தொடர்பில் அறிவுறுத்திய அவர், தற்காலத்தில் சுற்றாடலுக்கான இளைஞர்களின் அர்பணிப்பையும் பாராட்டினார். அத்தோடு உலகளாவிய காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்காக இலங்கை முன்நின்று செயற்பட வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தினார். மீள்புதுப்பிக்கத் தக்க வலுசக்தி துறைக்குள் இலங்கையின் கொள்ளளவு தொடர்பில் சுட்டிகாட்டிய அவர் பசுமை மற்றும் நவீன பொருளாதாரத்திற்கான ஜனாதிபதியின் தெரிவு தொடர்பிலும் விளக்கமளித்தார். நெருக்கடி நிலையிலிருந்து மீள எழுவதற்கான முயற்சிகளின் போது முகம்கொடுக்க நேர்ந்த சவால்களைப் போன்று நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அதரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படும் என்றும் தெரிவித்தார்.   நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக இளைஞர் யுவதிகள் முன்னெடுக்கும் பணிகள் தொடர்பில் நினைவுகூர்ந்த அவர், அதற்கான ஒத்துழைப்புக்களுக்காகவும் நன்றி தெரிவித்தார். மேலும் சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு நிலையான ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். நிகழ்வை ஏற்பாடு செய்வதமைக்காக பினூஜ அமரநாயக்க உள்ளிட்ட லியோ கழகத்தினருக்கு நன்றி கூறியதோடு, எதிர்காலத்தில் இளைஞர் யுவதிகளுக்கு இது போன்ற வாய்ப்புக்கள் அதிகளவில் உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் நாட்டின் முன்னேற்றத்துக்காக இளைஞர் யுவதிகளின் பங்களிப்பை நேரடியாக பெற்றுத்தரும் லியோ கழகம் போன்ற வேலைத்திட்டங்களை ஊக்குவிக்கின்றமைக்காக பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட கல்வித்துறைனருக்கும் பாராட்டு தெரிவித்தார். மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் /  பணிப்பாளர் பசிந்து குணரத்ன, சர்வதேச லியோ கழகத்தின் செயற்றிட்ட ஆலோசகர் லசந்த குணவர்தன, அதிபர்கள், பிரதி அதிபர்கள், நிறைவேற்று ஆலோசகர்கள், லியோ கழகத்தின் ஆலோசகர்கள், பாடசாலைகளின் மாணவத் தலைவர்கள் உள்ளிட்டவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். 

Advertisement

Advertisement

Advertisement