குழந்தைகளுக்கு அம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஜனவரி 6 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மத்தியில் அம்மை நோய் அதிகளவில் பரவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மை நோயாளர்கள் அதிகமாக பதிவாகியுள்ள 9 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றும் திட்டம் நடைமுறைபடுத்தப்படவுள்ளது.
குழந்தைகள் மத்தியில் பரவி வரும் நோய் - தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம் குழந்தைகளுக்கு அம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஜனவரி 6 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் மத்தியில் அம்மை நோய் அதிகளவில் பரவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த திட்டம் எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அம்மை நோயாளர்கள் அதிகமாக பதிவாகியுள்ள 9 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றும் திட்டம் நடைமுறைபடுத்தப்படவுள்ளது.