• Dec 28 2024

திருமலை கடலில் மீட்கப்பட்ட ஆளில்லா விமானத்தால் பரபரப்பு..!

Sharmi / Dec 27th 2024, 9:02 am
image

திருகோணமலை கடலில் சிறிய ரக விமானம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை கடலில் சிறிய ரக விமானம் ஒன்று மிதப்பதை நேற்றையதினம்(26) அதிகாலை அவதானித்த அப் பகுதி மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து கடற்படையினர் குறித்த விமானத்தை மீட்டு அதனை கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக  விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே தெரிவித்தார்.

திருகோணமலை கரையில் இருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில்  கடலில் இயந்திர படகில் சம்பவதினமான நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது கடலில் சிறிய ரக விமானம் மிதப்பதை கண்ட மீனவர்கள் அதனை கைப்பற்றி தமது படகில் இணைத்து கொண்ட பின்னர் கடற்படையினருக்கு தகவல் வழங்கினர்.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற கடற்படையினர் விமானத்தை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்

இந்த விமானம் ஆளில்லா விமானம் என்பதுடன் இந்த வகை விமானம் 2020 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டதுடன் சுமார் 40 கிலோ எடையுள்ளது இதுபோன்ற விமானங்கள் இந்திய விமானப்படையின் பயிற்சி அமர்வுகளில் இலக்குகளாகப் பயன்படுத்தப்படுவதுடன், குறித்த விமானம் சேதமடையவில்லை என்றும் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என ஆரம்ப கட்ட விசாரணைகளில்  தெரியவந்துள்ளது.

இருந்தபோதும் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விமானம் எப்படி வந்தது, ஏன் வந்தது  தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்

இதேவேளை இந்த ஆளில்லா விமானம் மீட்டதையடுத்து அப்பகுதி மக்களிடையே பதற்றமான நிலை காணப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

திருமலை கடலில் மீட்கப்பட்ட ஆளில்லா விமானத்தால் பரபரப்பு. திருகோணமலை கடலில் சிறிய ரக விமானம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,திருகோணமலை கடலில் சிறிய ரக விமானம் ஒன்று மிதப்பதை நேற்றையதினம்(26) அதிகாலை அவதானித்த அப் பகுதி மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து கடற்படையினர் குறித்த விமானத்தை மீட்டு அதனை கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக  விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே தெரிவித்தார்.திருகோணமலை கரையில் இருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில்  கடலில் இயந்திர படகில் சம்பவதினமான நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.இதன்போது கடலில் சிறிய ரக விமானம் மிதப்பதை கண்ட மீனவர்கள் அதனை கைப்பற்றி தமது படகில் இணைத்து கொண்ட பின்னர் கடற்படையினருக்கு தகவல் வழங்கினர்.இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற கடற்படையினர் விமானத்தை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்இந்த விமானம் ஆளில்லா விமானம் என்பதுடன் இந்த வகை விமானம் 2020 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டதுடன் சுமார் 40 கிலோ எடையுள்ளது இதுபோன்ற விமானங்கள் இந்திய விமானப்படையின் பயிற்சி அமர்வுகளில் இலக்குகளாகப் பயன்படுத்தப்படுவதுடன், குறித்த விமானம் சேதமடையவில்லை என்றும் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என ஆரம்ப கட்ட விசாரணைகளில்  தெரியவந்துள்ளது.இருந்தபோதும் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விமானம் எப்படி வந்தது, ஏன் வந்தது  தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்இதேவேளை இந்த ஆளில்லா விமானம் மீட்டதையடுத்து அப்பகுதி மக்களிடையே பதற்றமான நிலை காணப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement