• Dec 03 2024

கல்வி முறைமையும் வகுப்பறைகளும் மிக வேகமாக டிஜிட்டலாக மாறும்! - பிரதமர் நம்பிக்கை

Chithra / Dec 6th 2023, 11:43 am
image


அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் நாடு தழுவிய ரீதியில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். அந்த நேரத்தில் கல்வி முறையும் வகுப்பறையும் மிக வேகமாக மாறும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 

களு அக்கலை ஸ்ரீ சித்தார்த்த கனிஷ்ட வித்தியாலயத்தில் புதிய கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

ஒரு பாடசாலை ஆரம்பித்த நாளிலிருந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்பதை விட இங்கிருந்து எத்தனை பிள்ளைகள் கற்று நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் சேவைசெய்கிறார்கள் என்பது தான் பாடசாலைக்கு பெருமை.

பாடசாலைகளில் பிள்ளைகள் எதிர்பார்க்கும் அறிவை வழங்கும் திறன் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் ஒரு பாடசாலையின் வளர்ச்சி மேலும் பலம்பெறுகிறது.

கடந்த ஆண்டை மிகவும் கடினமான சூழ்நிலையில் நாம் கழித்தோம். இப்போது பொருளாதாரத்தை மீட்டெடுத்துள்ளோம்.

கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமே எங்கள் பிள்ளைகளுக்கு இருக்கின்ற மிகப்பெரிய பலம் என்று பெற்றோர்களாகிய நாம் எண்ணுகிறோம்.

எதிர்காலத்தில் எமது பிள்ளைகள் அதைப் பயன்படுத்திக் கொண்டு இந்த புதிய சவாலுக்கு முக்கிய காரணியாக மாறியுள்ள தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னேறுவார்கள் என்று நம்புகிறோம். என்றார்.

கல்வி முறைமையும் வகுப்பறைகளும் மிக வேகமாக டிஜிட்டலாக மாறும் - பிரதமர் நம்பிக்கை அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் நாடு தழுவிய ரீதியில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். அந்த நேரத்தில் கல்வி முறையும் வகுப்பறையும் மிக வேகமாக மாறும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். களு அக்கலை ஸ்ரீ சித்தார்த்த கனிஷ்ட வித்தியாலயத்தில் புதிய கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.ஒரு பாடசாலை ஆரம்பித்த நாளிலிருந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்பதை விட இங்கிருந்து எத்தனை பிள்ளைகள் கற்று நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் சேவைசெய்கிறார்கள் என்பது தான் பாடசாலைக்கு பெருமை.பாடசாலைகளில் பிள்ளைகள் எதிர்பார்க்கும் அறிவை வழங்கும் திறன் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் ஒரு பாடசாலையின் வளர்ச்சி மேலும் பலம்பெறுகிறது.கடந்த ஆண்டை மிகவும் கடினமான சூழ்நிலையில் நாம் கழித்தோம். இப்போது பொருளாதாரத்தை மீட்டெடுத்துள்ளோம்.கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமே எங்கள் பிள்ளைகளுக்கு இருக்கின்ற மிகப்பெரிய பலம் என்று பெற்றோர்களாகிய நாம் எண்ணுகிறோம்.எதிர்காலத்தில் எமது பிள்ளைகள் அதைப் பயன்படுத்திக் கொண்டு இந்த புதிய சவாலுக்கு முக்கிய காரணியாக மாறியுள்ள தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னேறுவார்கள் என்று நம்புகிறோம். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement