• Nov 24 2024

கிளிநொச்சியில் பரவும் வெண் ஈ தாக்கம்...! தேங்காய்களுக்கு தட்டுப்பாடு...!

Sharmi / Mar 23rd 2024, 1:39 pm
image

கிளிநொச்சி மாவட்டத்தின் வெண் ஈ தாக்கம் காரணமாக தேங்காய்க்கு பெரிதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தேங்காய் கொள்வனவாளர்களும், தென்னை பண்ணையாளர்களும் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வெண் ஈ தாக்கம் காரணமாக பலரது தென்னை தோட்டங்களிலுள்ள  தென்னை மரங்களில் வெறும் மரங்களாக காணப்படுவதாகவும்  வெண் ஈ தாக்கப்பட்ட மரங்களில் சிறு குரும்பைகூட இல்லாத நிலையிலும் வெறுமனே நோய் தாக்கம் ஏற்படுத்தப்பட்ட மரமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்பொழுது கிளிநொச்சி சேவை சந்தையில் ஒரு தேங்காயின் விலை 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வேர்தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில்  தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு மாதமும் அறுவடை செய்கின்ற தேங்காயை விட  ஒரு பங்கு மாத்திரமே தற்பொழுது அறுவடை செய்யப்பட்டு வருவதாகவும் இனிவரும் மாதங்களில்  முற்றாக தேங்காய் இல்லாத நிலை காணப்படும் எனவும் இதன் காரணமாக முட்டைக்கு ஏற்பட்ட நிலையே தேங்காய்க்கும் ஏற்படும் நிலை காணப்படும்.

இனிவரும் மாதங்களில் தேங்காய் ஒன்று 200-300 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படகூடும் எனவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் தென்னை பயிர்செய்கையாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கிளிநொச்சியில் பரவும் வெண் ஈ தாக்கம். தேங்காய்களுக்கு தட்டுப்பாடு. கிளிநொச்சி மாவட்டத்தின் வெண் ஈ தாக்கம் காரணமாக தேங்காய்க்கு பெரிதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தேங்காய் கொள்வனவாளர்களும், தென்னை பண்ணையாளர்களும் தெரிவித்துள்ளனர்.அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வெண் ஈ தாக்கம் காரணமாக பலரது தென்னை தோட்டங்களிலுள்ள  தென்னை மரங்களில் வெறும் மரங்களாக காணப்படுவதாகவும்  வெண் ஈ தாக்கப்பட்ட மரங்களில் சிறு குரும்பைகூட இல்லாத நிலையிலும் வெறுமனே நோய் தாக்கம் ஏற்படுத்தப்பட்ட மரமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக தற்பொழுது கிளிநொச்சி சேவை சந்தையில் ஒரு தேங்காயின் விலை 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வேர்தெரிவித்துள்ளனர்.அத்துடன் குறித்த விடயம் தொடர்பில்  தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கையில்,ஒவ்வொரு மாதமும் அறுவடை செய்கின்ற தேங்காயை விட  ஒரு பங்கு மாத்திரமே தற்பொழுது அறுவடை செய்யப்பட்டு வருவதாகவும் இனிவரும் மாதங்களில்  முற்றாக தேங்காய் இல்லாத நிலை காணப்படும் எனவும் இதன் காரணமாக முட்டைக்கு ஏற்பட்ட நிலையே தேங்காய்க்கும் ஏற்படும் நிலை காணப்படும்.இனிவரும் மாதங்களில் தேங்காய் ஒன்று 200-300 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படகூடும் எனவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் தென்னை பயிர்செய்கையாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement