• Nov 22 2024

55 வருடங்களாக திருத்தப்படாத மின்சார சபை சட்டத்தை திருத்தியாக வேண்டும் - காஞ்சன விஜய சேகர...!

Anaath / Jun 6th 2024, 1:07 pm
image

பல்வேறு சட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ள போதும் மின்சார சட்டம்  தொடர்பில் 1969 ஆம் ஆண்டு மின்சார சபை சட்டம்  தான் இன்னும் இருக்கிறது. அது நிறைவேற்றப்பட்டு 55 ஆகிய போதும் இன்னும்  திருத்தப்படவில்லை என அமைச்சர் காஞ்சன விஜய சூரிய .தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றில்  இலங்கை மின்சாரம் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம் பெற்று வருகிறது. 

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை மின்சாரம் சட்டமூலம்  புதிய சட்டமாக சமர்பிக்கப்படுகின்றது இதற்கு பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். நாங்கள் விரைவாக இதனை கொண்டு வந்திருக்கின்றோம். அவர்கள் அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனை நாங்கள்  ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மின்சாரத்துறையை எடுத்துக்கொண்டால் பாவனையாளர்கள் குற்றச்சாட்டை குறிப்பிட்டிருந்தார்கள். சேவைகள், செயல் திறன், மின்சார பட்டியல், சபையின் குறைபாடுகளை குறிப்பிட்டிருந்தார்கள். 

1969 ஆம் ஆண்டு மின்சார சபை சட்டம் தான் இருக்கின்றது. இன்னும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாங்கள் சட்டங்களை திருத்தி இருக்கின்றோம். ஆனால் மின்சார சபை சட்டத்தை இன்னும் திருத்த வில்லை. இதனை நாங்கள் திருத்தியாக வேண்டும். 

தற்போதைய சட்டத்தில் இதனை நாங்கள் முடியுமென்று கருதினால் கடந்த காலத்தில் இந்த சட்டத்தினை பயன்படுத்தி இந்த தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்திருக்கலாம். அப்படி செய்ய முடியாமல் போயிருக்கின்றது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


00:00

55 வருடங்களாக திருத்தப்படாத மின்சார சபை சட்டத்தை திருத்தியாக வேண்டும் - காஞ்சன விஜய சேகர. பல்வேறு சட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ள போதும் மின்சார சட்டம்  தொடர்பில் 1969 ஆம் ஆண்டு மின்சார சபை சட்டம்  தான் இன்னும் இருக்கிறது. அது நிறைவேற்றப்பட்டு 55 ஆகிய போதும் இன்னும்  திருத்தப்படவில்லை என அமைச்சர் காஞ்சன விஜய சூரிய .தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்றில்  இலங்கை மின்சாரம் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம் பெற்று வருகிறது. இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மின்சாரம் சட்டமூலம்  புதிய சட்டமாக சமர்பிக்கப்படுகின்றது இதற்கு பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். நாங்கள் விரைவாக இதனை கொண்டு வந்திருக்கின்றோம். அவர்கள் அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனை நாங்கள்  ஏற்றுக்கொள்ள வேண்டும்.மின்சாரத்துறையை எடுத்துக்கொண்டால் பாவனையாளர்கள் குற்றச்சாட்டை குறிப்பிட்டிருந்தார்கள். சேவைகள், செயல் திறன், மின்சார பட்டியல், சபையின் குறைபாடுகளை குறிப்பிட்டிருந்தார்கள். 1969 ஆம் ஆண்டு மின்சார சபை சட்டம் தான் இருக்கின்றது. இன்னும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாங்கள் சட்டங்களை திருத்தி இருக்கின்றோம். ஆனால் மின்சார சபை சட்டத்தை இன்னும் திருத்த வில்லை. இதனை நாங்கள் திருத்தியாக வேண்டும். தற்போதைய சட்டத்தில் இதனை நாங்கள் முடியுமென்று கருதினால் கடந்த காலத்தில் இந்த சட்டத்தினை பயன்படுத்தி இந்த தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்திருக்கலாம். அப்படி செய்ய முடியாமல் போயிருக்கின்றது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement