• Nov 21 2024

தென்னிலங்கையில் பரபரப்பு...! சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு சந்திரிக்கா திடீர் விஜயம்...!

Sharmi / May 7th 2024, 10:48 am
image

முன்னாள் ஜனாதிபதி  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐந்து வருடங்களின் பின்னர் நேற்று (06) மாலை கொழும்பு டீ.பீ.ஜயா மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

சந்திரிக்காவுடன்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க ஆகியோரும் வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து வெளியேறும் போது  ​​ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த சந்திரிக்கா,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  முக்கியஸ்தர்களுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும், தான் எப்போதும் கட்சியில் இருந்ததாகவும், ஆனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை விட்டு பிரிந்து சென்றதாகவும், அதன் பின்னர் தான் தலைமையகத்திற்கு வரவில்லை எனவும் தெரிவித்தார்.



தென்னிலங்கையில் பரபரப்பு. சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு சந்திரிக்கா திடீர் விஜயம். முன்னாள் ஜனாதிபதி  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐந்து வருடங்களின் பின்னர் நேற்று (06) மாலை கொழும்பு டீ.பீ.ஜயா மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.சந்திரிக்காவுடன்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க ஆகியோரும் வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து வெளியேறும் போது  ​​ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த சந்திரிக்கா,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  முக்கியஸ்தர்களுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும், தான் எப்போதும் கட்சியில் இருந்ததாகவும், ஆனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை விட்டு பிரிந்து சென்றதாகவும், அதன் பின்னர் தான் தலைமையகத்திற்கு வரவில்லை எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement