நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையில் இன்றையதினம்(05) குழப்பகரமான நிலை ஏற்பட்டதுடன் பயணிகள் பெரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை நாகபட்டினத்தில் இருந்து புறப்பட்டு குறித்த கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது.
இவ்வாறு வந்த கப்பலானது காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினத்திற்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு தயாரான நிலையில் பயணிகளும் கப்பலில் ஏறி பயணத்திற்கு தயாராக இருந்தனர்.
இருப்பினும் கப்பலில் போதிய அளவு எரிபொருள் இன்மை காரணமாக குறித்த பயணமானது இடைநிறுத்தப்பட்டதாக கப்பலின் கப்டன் அறிவித்தார்.
இதனையடுத்து பயணத்திற்கு தயாராக இருந்த பயணிகள் மத்தியில் பெரும் குழப்ப நிலை உருவாகியது.
இந்நிலையில் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
நாகபட்டினத்திற்கு செல்லவிருந்த படகுச் சேவை திடீர் ரத்து- பயணிகள் குழப்பம். நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையில் இன்றையதினம்(05) குழப்பகரமான நிலை ஏற்பட்டதுடன் பயணிகள் பெரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை நாகபட்டினத்தில் இருந்து புறப்பட்டு குறித்த கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது.இவ்வாறு வந்த கப்பலானது காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினத்திற்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு தயாரான நிலையில் பயணிகளும் கப்பலில் ஏறி பயணத்திற்கு தயாராக இருந்தனர். இருப்பினும் கப்பலில் போதிய அளவு எரிபொருள் இன்மை காரணமாக குறித்த பயணமானது இடைநிறுத்தப்பட்டதாக கப்பலின் கப்டன் அறிவித்தார்.இதனையடுத்து பயணத்திற்கு தயாராக இருந்த பயணிகள் மத்தியில் பெரும் குழப்ப நிலை உருவாகியது.இந்நிலையில் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.