• Apr 28 2026

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் கருத்தரிப்பு மையம் மீள ஆரம்பம் !

Ziya / Feb 16th 2026, 2:42 pm
image

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் கடந்த 03 வருட காலமாக கருத்தரிப்பு மையம் இயங்கி வந்தது.


இந்நிலையில் நிதி தட்டுப்பாடு காரணமாக அந்த கருத்தரிப்பு மையம் கடந்த 06 மாத காலமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.


இப் பிரச்சினை தொடர்பாக அண்மையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை அத்தியட்சகர் புவனேந்திரநாதன் கருத்து தெரிவித்திருந்தார்.


இடைநிறுத்தப்பட்டுள்ள இச்சேவையை மீள செயற்படுத்து மாதாந்தம் சுமார் 03 இலட்சம் வரை தேவைப்படும் எனவும் வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்திருந்தார்.


அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அதற்குரிய நிதியை தமது சபையிலிருந்து மாதாந்தம் மூன்று இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அதற்குரிய மருத்துவ பொருட்களை பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தார்.


இந்நிலையில் இன்றைய தினம் அதற்குரிய மருத்துவ பொருட்கள் உத்தியோக பூர்வமாக வைத்தியசாலை நிருவாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் புவனேந்திரநாதன் கல்முனை வடக்கு வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்திய அதிகாரி கு.சுகுணன், சத்திர சிகிச்சை நிபுணர் பாமதி ஞானப்பிரகாசம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் கருத்தரிப்பு மையம் மீள ஆரம்பம் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் கடந்த 03 வருட காலமாக கருத்தரிப்பு மையம் இயங்கி வந்தது.இந்நிலையில் நிதி தட்டுப்பாடு காரணமாக அந்த கருத்தரிப்பு மையம் கடந்த 06 மாத காலமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.இப் பிரச்சினை தொடர்பாக அண்மையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை அத்தியட்சகர் புவனேந்திரநாதன் கருத்து தெரிவித்திருந்தார்.இடைநிறுத்தப்பட்டுள்ள இச்சேவையை மீள செயற்படுத்து மாதாந்தம் சுமார் 03 இலட்சம் வரை தேவைப்படும் எனவும் வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்திருந்தார்.அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அதற்குரிய நிதியை தமது சபையிலிருந்து மாதாந்தம் மூன்று இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அதற்குரிய மருத்துவ பொருட்களை பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தார்.இந்நிலையில் இன்றைய தினம் அதற்குரிய மருத்துவ பொருட்கள் உத்தியோக பூர்வமாக வைத்தியசாலை நிருவாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் புவனேந்திரநாதன் கல்முனை வடக்கு வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்திய அதிகாரி கு.சுகுணன், சத்திர சிகிச்சை நிபுணர் பாமதி ஞானப்பிரகாசம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement