• Apr 28 2025

போதைப் பொருளுக்கு எதிரான போராட்டம்..யாழில் முன்னெடுப்பு..!!

Tamil nila / Feb 13th 2024, 8:51 pm
image

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் ஒன்று  இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


"போதைப் பொருள் பெருந்தீமையிலிருந்து எம்மையும், எமது சந்ததியினரையும் பாதுகாப்போம்" எனும் தொனிப்பொருளில் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.


போராட்டத்தில் யாழ் மாவட்ட சர்வமத பேரவை தலைவர் சிவஸ்ரீ கிருபானந்த குருக்கள், செயலாளர் அருட்பணி இ.ராஜ்குமார், யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர், மௌலவி வி.ஏ.எஸ்.சுபியான் உள்ளிட்ட சில மத தலைவர்கள் கலந்துகொண்டனர்.



போதைப்பொருள் பெருந்தீமையில் இருந்து எம்மையும் எமது சமூகத்தினரையும் பாதுகாப்போம்.போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .




போதைப் பொருளுக்கு எதிரான போராட்டம்.யாழில் முன்னெடுப்பு. யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் ஒன்று  இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது."போதைப் பொருள் பெருந்தீமையிலிருந்து எம்மையும், எமது சந்ததியினரையும் பாதுகாப்போம்" எனும் தொனிப்பொருளில் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.போராட்டத்தில் யாழ் மாவட்ட சர்வமத பேரவை தலைவர் சிவஸ்ரீ கிருபானந்த குருக்கள், செயலாளர் அருட்பணி இ.ராஜ்குமார், யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர், மௌலவி வி.ஏ.எஸ்.சுபியான் உள்ளிட்ட சில மத தலைவர்கள் கலந்துகொண்டனர்.போதைப்பொருள் பெருந்தீமையில் இருந்து எம்மையும் எமது சமூகத்தினரையும் பாதுகாப்போம்.போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

Advertisement

Advertisement

Advertisement

Buy Now