அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வசித்து வந்த 65 முதியவர் ஒருவர் பறவைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக லூசியானா சுகாதார துறை தெரிவித்து உள்ளது.
காட்டு பறவைகள் மற்றும் வளர்ப்பு பறவைகள் ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்த அவருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
இவர் தவிர, வேறு யாருக்கும் இந்த தொற்று ஏற்படவில்லை என அதுபற்றி லூசியானா சுகாதார துறை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
அவரை இழந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவில் முதன்முறையாக பறவை காய்ச்சல் பாதிப்புக்கு ஒருவர் பலியாகி உள்ளார் என்றும் அந்த துறை தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவில் பறவை காய்ச்சல் பாதிப்புக்குள்ளான முதலாவது நபர் பலி அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வசித்து வந்த 65 முதியவர் ஒருவர் பறவைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக லூசியானா சுகாதார துறை தெரிவித்து உள்ளது.காட்டு பறவைகள் மற்றும் வளர்ப்பு பறவைகள் ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்த அவருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.இவர் தவிர, வேறு யாருக்கும் இந்த தொற்று ஏற்படவில்லை என அதுபற்றி லூசியானா சுகாதார துறை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.அவரை இழந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து உள்ளது.அமெரிக்காவில் முதன்முறையாக பறவை காய்ச்சல் பாதிப்புக்கு ஒருவர் பலியாகி உள்ளார் என்றும் அந்த துறை தெரிவித்து உள்ளது.