• Sep 20 2024

எரிவாயு சின்னம் ஜனாதிபதிக்கு கிடைத்த இறைவனின் ஆசிர்வாதம்! - ஆஷு மாரசிங்க புகழாரம்

Chithra / Aug 16th 2024, 8:40 am
image

Advertisement

 

சமையல் எரிவாயு வரிசையை முடிவுக்கு கொண்டுவந்த  ரணில் விக்ரமசிங்கவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னமாக கிடைத்திருப்பது இறைவனின் ஆசிர்வாதமாகும்  என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

மக்களின் இதயத்தை தொடக்கூடிய இந்த சின்னம்இ நிச்சயமாக ரணிலை வெற்றிபெறச்செய்யும் என்றும் தெரிவித்தார்.

சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் சமையல் எரிவாயுக்காக வரிசையில் இருந்த சந்தர்ப்பத்திலேயே ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று, எரிவாயு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தார். 

ரணில் விக்ரமசிங்கவின் இந்த மகத்தான பணிக்கு இறைவனின் ஆசிர்வாதமாகவே அவருக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் தேர்தல் சின்னமாக கிடைத்திருக்கிறது. 

சமையல் எரிவாயு வரிசையின் நினைவுகளுடன் சிலிண்டர் சின்னத்தை வெற்றிபெறச்செய்ய முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

மக்களுக்கு சமையல் எரிவாயு எந்தளவு முக்கியமோ அதேபோன்றே இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு ரணில் விக்ரமசிங்க முக்கியமாகும். 

 ரணில் விக்ரமசிங்க குறுகிய காலத்தில் எவ்வாறு சமையல் எரிவாயு வரிசை உள்ளிட்ட ஏனைய வரிசை யுகத்துக்கு தீர்வு கண்டாராே அதேபோன்று மக்கள் தற்போது எதிர்கொண்டுவரும் பொருளாதார சுமைக்கும் தீர்வுகாண்பார். அதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.என்றார்.

எரிவாயு சின்னம் ஜனாதிபதிக்கு கிடைத்த இறைவனின் ஆசிர்வாதம் - ஆஷு மாரசிங்க புகழாரம்  சமையல் எரிவாயு வரிசையை முடிவுக்கு கொண்டுவந்த  ரணில் விக்ரமசிங்கவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னமாக கிடைத்திருப்பது இறைவனின் ஆசிர்வாதமாகும்  என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.மக்களின் இதயத்தை தொடக்கூடிய இந்த சின்னம்இ நிச்சயமாக ரணிலை வெற்றிபெறச்செய்யும் என்றும் தெரிவித்தார்.சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.நாட்டு மக்கள் சமையல் எரிவாயுக்காக வரிசையில் இருந்த சந்தர்ப்பத்திலேயே ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று, எரிவாயு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தார். ரணில் விக்ரமசிங்கவின் இந்த மகத்தான பணிக்கு இறைவனின் ஆசிர்வாதமாகவே அவருக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் தேர்தல் சின்னமாக கிடைத்திருக்கிறது. சமையல் எரிவாயு வரிசையின் நினைவுகளுடன் சிலிண்டர் சின்னத்தை வெற்றிபெறச்செய்ய முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.மக்களுக்கு சமையல் எரிவாயு எந்தளவு முக்கியமோ அதேபோன்றே இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு ரணில் விக்ரமசிங்க முக்கியமாகும்.  ரணில் விக்ரமசிங்க குறுகிய காலத்தில் எவ்வாறு சமையல் எரிவாயு வரிசை உள்ளிட்ட ஏனைய வரிசை யுகத்துக்கு தீர்வு கண்டாராே அதேபோன்று மக்கள் தற்போது எதிர்கொண்டுவரும் பொருளாதார சுமைக்கும் தீர்வுகாண்பார். அதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.என்றார்.

Advertisement

Advertisement

Advertisement