• May 19 2026

தமிழரசுக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சற்றுமுன் திருமலை மண்ணில் ஆரம்பம்...!samugammedia

Ziya / Jan 27th 2024, 1:43 pm
image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் சற்றுமுன் திருகோணமலையில் ஆரம்பமானது.

இக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்ட நிலையில், பொதுச்செயலாளர் உள்ளிட்ட ஏனைய பதவிகளுக்கு இன்று புதியவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அதேவேளை தமிழரசுக் கட்சியின்  உப தலைவராக வடமாகாண சபை அவைத்தலைவரும் கட்சியின் மூத்த உறுப்பினருமான சீ.வீ.கே சிவஞானத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி யாருக்கு வழங்கப்படவுள்ளது என்பது தொடர்பில் கட்சி மட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கடும் எதிர்பார்ப்பு  நிலவி வருகின்றது.

அந்தவகையில் ஞானமுத்து ஸ்ரீநேசன்,சண்முகம் குகதாசன்,  இரா.சாணக்கியன் மற்றும் சேவியர் குலநாயகம் ஆகியோர் அந்தப் பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட வாய்ப்பிருப்பதாக நேற்றுச் செய்திகள் வெளி வந்திருந்தன.

ஆனால், போட்டியில்லாமல் ஏகமனதாகத் தெரிவு செய்யப்படும் பட்சத்திலேயே அந்தப் பதவியை ஏற்றுக்கொள்வேன் என்றும், மாற்று வேட்பாளர் இருக்கும் பட்சத்தில் தேர்தல், வாக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்களுக்குச் செல்ல மாட்டேன் என்றும் குகதாசன் நேற்றிரவு தெரிவித்தார்.

இதேவேளை, ஏகமனதாகவோ அல்லது தேர்தல் மூலமோ எவ்வாறு தெரிவு செய்யப்பட்டாலும் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று இரா.சாணக்கியன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் சற்றுமுன் பொதுக் குழுக் கூட்டம் ஆரம்பமாகியிருப்பபது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை தோற்றுவித்துள்ளது.


தமிழரசுக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சற்றுமுன் திருமலை மண்ணில் ஆரம்பம்.samugammedia இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் சற்றுமுன் திருகோணமலையில் ஆரம்பமானது.இக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.இதேவேளை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்ட நிலையில், பொதுச்செயலாளர் உள்ளிட்ட ஏனைய பதவிகளுக்கு இன்று புதியவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.அதேவேளை தமிழரசுக் கட்சியின்  உப தலைவராக வடமாகாண சபை அவைத்தலைவரும் கட்சியின் மூத்த உறுப்பினருமான சீ.வீ.கே சிவஞானத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி யாருக்கு வழங்கப்படவுள்ளது என்பது தொடர்பில் கட்சி மட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கடும் எதிர்பார்ப்பு  நிலவி வருகின்றது.அந்தவகையில் ஞானமுத்து ஸ்ரீநேசன்,சண்முகம் குகதாசன்,  இரா.சாணக்கியன் மற்றும் சேவியர் குலநாயகம் ஆகியோர் அந்தப் பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட வாய்ப்பிருப்பதாக நேற்றுச் செய்திகள் வெளி வந்திருந்தன.ஆனால், போட்டியில்லாமல் ஏகமனதாகத் தெரிவு செய்யப்படும் பட்சத்திலேயே அந்தப் பதவியை ஏற்றுக்கொள்வேன் என்றும், மாற்று வேட்பாளர் இருக்கும் பட்சத்தில் தேர்தல், வாக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்களுக்குச் செல்ல மாட்டேன் என்றும் குகதாசன் நேற்றிரவு தெரிவித்தார்.இதேவேளை, ஏகமனதாகவோ அல்லது தேர்தல் மூலமோ எவ்வாறு தெரிவு செய்யப்பட்டாலும் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று இரா.சாணக்கியன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.இவ்வாறானதொரு நிலையில் சற்றுமுன் பொதுக் குழுக் கூட்டம் ஆரம்பமாகியிருப்பபது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை தோற்றுவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement