• Jan 07 2025

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை- சஜித் தரப்பு குற்றச்சாட்டு..!

Sharmi / Dec 14th 2024, 8:59 am
image

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா  கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் அரிசி ஆலை உரிமையாளர்களின் ஏகாதிபத்திய போக்கு தொடர்பில் கடந்த காலங்களில் பரவலாக பேசப்பட்டது. 

அது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தற்போது பிரதான பங்குதாரராக இருக்கும் சுனில் ஹந்துன்நெத்தி போன்றோர் கடந்த அரசாங்கங்களை மிகக் கடுமையாக தூற்றினர்.

தாம் ஆட்சிக்கு வந்தால் அரிசி வர்த்தகத்தில் உள்ள மாபியாவை இல்லா தொழிப்பதாக சூளுரைத்தனர்.

அனைத்து ஆலைகளையும் பரிசோதித்து உரிய வகையில் அரிசி விநியோகம் இடம்பெறுவதை உறுதிசெய்வதாக கூறினர்.

எனினும் இன்று என்னவாயிற்று? அரசாங்கத்தால் உரிய வகையில் மக்களுக்கான அரிசியை வழங்க முடியவில்லை.

உரிய திட்டமிடலும் அனுபவம் இன்மையும் இதற்குக் காரணமாகும்.

என்னைப் பொருத்தவரையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரிசி ஆலை உரிமையாளர்களிடம் அடி பணிந்துவிட்டார் என்றே கூறுவேன் எனவும் தெரிவித்தார்.


அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை- சஜித் தரப்பு குற்றச்சாட்டு. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.இது தொடர்பில் அக்கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா  கருத்து தெரிவிக்கையில்,நாட்டில் அரிசி ஆலை உரிமையாளர்களின் ஏகாதிபத்திய போக்கு தொடர்பில் கடந்த காலங்களில் பரவலாக பேசப்பட்டது. அது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தற்போது பிரதான பங்குதாரராக இருக்கும் சுனில் ஹந்துன்நெத்தி போன்றோர் கடந்த அரசாங்கங்களை மிகக் கடுமையாக தூற்றினர்.தாம் ஆட்சிக்கு வந்தால் அரிசி வர்த்தகத்தில் உள்ள மாபியாவை இல்லா தொழிப்பதாக சூளுரைத்தனர்.அனைத்து ஆலைகளையும் பரிசோதித்து உரிய வகையில் அரிசி விநியோகம் இடம்பெறுவதை உறுதிசெய்வதாக கூறினர்.எனினும் இன்று என்னவாயிற்று அரசாங்கத்தால் உரிய வகையில் மக்களுக்கான அரிசியை வழங்க முடியவில்லை.உரிய திட்டமிடலும் அனுபவம் இன்மையும் இதற்குக் காரணமாகும்.என்னைப் பொருத்தவரையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரிசி ஆலை உரிமையாளர்களிடம் அடி பணிந்துவிட்டார் என்றே கூறுவேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement