• Sep 20 2024

மக்களை குழப்பும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது - சந்திரகுமார்! SamugamMedia

Tamil nila / Feb 16th 2023, 3:47 pm
image

Advertisement

அரசாங்கம் நாளுக்கு நாள் வெளியிடுகின்ற செய்திகள் காரணமாக தேர்தல் நடக்குமா இல்லையா என்ற கேள்வியும் குழப்பமும்  மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

.

நாடு அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலையும் நடாத்தாதுவிடின் அது ஐனநாயக நெருக்கடியையும் ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களைத் திட்டமிட்ட காலத்தில் நடத்த வேண்டும். 


அதுவே மக்களின் ஜனநாயக உரிமைகளை மதித்துப் பாதுகாப்பதாக அமையும். அதுவே மக்களுடைய எதிர்பார்ப்புமாகும் 


தற்போது வெளிவரும் செய்திகள் தேர்தல் நடக்குமா இல்லையா என்ற கேள்வியையும் குழப்பத்தையும் மக்களிடையே உண்டாக்கியுள்ளன. 


அரசியலமைப்பின் பிரகாரம், மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் உரிமையும் அதிகாரமும் மக்களுக்குண்டு. 


அதனை மறுக்கும் அல்லது தாமதப்படுத்தும் நடவடிக்கைகள் ஏற்கமுடியாதவையாகும். 

நாடு அரசியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் தேர்தலை நடத்தாமல் தவிர்ப்பதன் மூலம் ஜனநாயக நெருக்கடியையும் உருவாக்கக் கூடாது.

 

ஜனநாயகச் சூழலை மேம்படுத்துவதன் மூலமே மக்களின் உரிமைகளைப் பேணுவதுடன் அனைத்து நெருக்கடிகளிலிருந்தும் மீளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்களை குழப்பும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது - சந்திரகுமார் SamugamMedia அரசாங்கம் நாளுக்கு நாள் வெளியிடுகின்ற செய்திகள் காரணமாக தேர்தல் நடக்குமா இல்லையா என்ற கேள்வியும் குழப்பமும்  மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.நாடு அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலையும் நடாத்தாதுவிடின் அது ஐனநாயக நெருக்கடியையும் ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களைத் திட்டமிட்ட காலத்தில் நடத்த வேண்டும். அதுவே மக்களின் ஜனநாயக உரிமைகளை மதித்துப் பாதுகாப்பதாக அமையும். அதுவே மக்களுடைய எதிர்பார்ப்புமாகும் தற்போது வெளிவரும் செய்திகள் தேர்தல் நடக்குமா இல்லையா என்ற கேள்வியையும் குழப்பத்தையும் மக்களிடையே உண்டாக்கியுள்ளன. அரசியலமைப்பின் பிரகாரம், மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் உரிமையும் அதிகாரமும் மக்களுக்குண்டு. அதனை மறுக்கும் அல்லது தாமதப்படுத்தும் நடவடிக்கைகள் ஏற்கமுடியாதவையாகும். நாடு அரசியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் தேர்தலை நடத்தாமல் தவிர்ப்பதன் மூலம் ஜனநாயக நெருக்கடியையும் உருவாக்கக் கூடாது. ஜனநாயகச் சூழலை மேம்படுத்துவதன் மூலமே மக்களின் உரிமைகளைப் பேணுவதுடன் அனைத்து நெருக்கடிகளிலிருந்தும் மீளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement