நாட்டில் நடைபெறும் குற்றச் செயல்களில் அரசியல்வாதிகள் தொடர்புபட்டிருந்தால், அவர்களின் பெயர்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க வேண்டுகோள் விடுத்தார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி தங்கள் பணிகளை மேற்கொள்வது குறித்து அரசுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், அடக்குமுறைக்கு எதிராகவும், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் ஒன்றிணைந்துள்ளன. என குறிப்பிட்டார்.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த சம்மேளனத்துக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டால் அதில் பங்கேற்பதா இல்லையா என்பது கட்சி ரீதியில் கலந்துரையாடப்பட்டு தீர்மானிக்கப்படும். எமது தற்போதைய இணைவு அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரானது மாத்திரமே. அரசியல் பயணம் குறித்து எதிர்காலத்தில் தீர்மானிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியதால் பெரும் அச்சத்தில் உள்ள அரசு திஸ்ஸ அத்தநாயக்க சூளுரை நாட்டில் நடைபெறும் குற்றச் செயல்களில் அரசியல்வாதிகள் தொடர்புபட்டிருந்தால், அவர்களின் பெயர்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க வேண்டுகோள் விடுத்தார். கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி தங்கள் பணிகளை மேற்கொள்வது குறித்து அரசுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அடக்குமுறைக்கு எதிராகவும், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் ஒன்றிணைந்துள்ளன. என குறிப்பிட்டார்.இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த சம்மேளனத்துக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டால் அதில் பங்கேற்பதா இல்லையா என்பது கட்சி ரீதியில் கலந்துரையாடப்பட்டு தீர்மானிக்கப்படும். எமது தற்போதைய இணைவு அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரானது மாத்திரமே. அரசியல் பயணம் குறித்து எதிர்காலத்தில் தீர்மானிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.