• Sep 20 2024

நாட்டில் உருவாகியுள்ள சுற்றாடல் நெருக்கடிக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும்-கரு!

Sharmi / Jan 7th 2023, 10:17 am
image

Advertisement

கடந்த 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச பதவியேற்கும் போது 29 வீதமாக இருந்த நாட்டின் காடுகளின் அளவு இன்று 16 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இலங்கையில் உருவாகியுள்ள பாரிய சுற்றாடல் நெருக்கடிக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மேலதிகமாக, ஒரு நாடாக இன்று பாரிய சுற்றாடல் நெருக்கடியின் விளிம்பில் இருப்பதாக கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டில் தினமும் ஒரு யானையாவது இறப்பதாகவும் 2022ஆம் ஆண்டில் மட்டும் 395 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பாரிய அனர்த்தத்தை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் உருவாகியுள்ள சுற்றாடல் நெருக்கடிக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும்-கரு கடந்த 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச பதவியேற்கும் போது 29 வீதமாக இருந்த நாட்டின் காடுகளின் அளவு இன்று 16 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே இலங்கையில் உருவாகியுள்ள பாரிய சுற்றாடல் நெருக்கடிக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மேலதிகமாக, ஒரு நாடாக இன்று பாரிய சுற்றாடல் நெருக்கடியின் விளிம்பில் இருப்பதாக கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் நாட்டில் தினமும் ஒரு யானையாவது இறப்பதாகவும் 2022ஆம் ஆண்டில் மட்டும் 395 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த பாரிய அனர்த்தத்தை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement