• May 09 2024

அரசாங்கத்தின் தீர்மானத்தால் வங்கிக் கடன் பெறுவதில் ஏற்படவுள்ள சிக்கல்!

Chithra / Mar 13th 2024, 9:20 am
image

Advertisement

 

பரேட் சட்டத்தின் ஊடாக கடனை வசூலிப்பதை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக எடுத்த தீர்மானம் வங்கித் துறையில் பெரும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை வங்கிகள் சங்கம்  தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கை வங்கிகள் சங்கம் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,

முழு வர்த்தக சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு சில கடனை செலுத்தாதவர்களின் அழுத்தங்களுக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடன் வசூல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் தலையீடு ஒரு எச்சரிக்கையாகும் என இலங்கை மத்திய வங்கி (CBSL), 

உரிமம் பெற்ற அரச வங்கிகள், பட்டியலிடப்பட்ட தனியார் வங்கிகள் மற்றும் சர்வதேச வங்கிகளின் கிளை அலுவலகங்கள் ஆகியவற்றால் அனைத்து வங்கிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும்.

இந்த விடயம் தொடர்பில் வங்கிகளுடன் எவ்வித கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை.

அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தினால் அனைத்து வர்த்தகர்களுக்கும் கடன் பெறுவதற்கான செலவு அதிகரிக்கும். என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தீர்மானத்தால் வங்கிக் கடன் பெறுவதில் ஏற்படவுள்ள சிக்கல்  பரேட் சட்டத்தின் ஊடாக கடனை வசூலிப்பதை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக எடுத்த தீர்மானம் வங்கித் துறையில் பெரும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை வங்கிகள் சங்கம்  தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கை வங்கிகள் சங்கம் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,முழு வர்த்தக சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு சில கடனை செலுத்தாதவர்களின் அழுத்தங்களுக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.கடன் வசூல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் தலையீடு ஒரு எச்சரிக்கையாகும் என இலங்கை மத்திய வங்கி (CBSL), உரிமம் பெற்ற அரச வங்கிகள், பட்டியலிடப்பட்ட தனியார் வங்கிகள் மற்றும் சர்வதேச வங்கிகளின் கிளை அலுவலகங்கள் ஆகியவற்றால் அனைத்து வங்கிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும்.இந்த விடயம் தொடர்பில் வங்கிகளுடன் எவ்வித கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை.அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தினால் அனைத்து வர்த்தகர்களுக்கும் கடன் பெறுவதற்கான செலவு அதிகரிக்கும். என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement