திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் சமகால அரசியல் குறித்து ஊடக சந்திப்பை முன்னெடுத்திருந்த அவர் மேலும் கூறுகையில் -
அந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், மறுபுறம் தமிழ் அரசியல் கட்சிகள் தமக்கிடையே குடுமிச் சண்டையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த விவகாரத்தை தான் தற்போது பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை எனத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, தனக்கான காலம் வரும்போது அதற்கான உரிய செயற்றிட்டத்தை முன்வைப்பேன் எனவும் கூறியுள்ளார்.
கடந்த காலங்களிலும் யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரப் பகுதியில் மும்மன்னர்களின் சிலை, உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் சிலை, முத்திரைச் சந்தியில் சங்கிலியனின் கம்பீரமான சிலை மற்றும் மடத்தகடியில் தனிகாசலம் அடிகளாரின் சிலை உள்ளிட்டவற்றை நிறுவுவதில் தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் வரலாற்று அடையாளங்களைப் பாதுகாக்கும் விடயத்தில் கடந்த காலங்களில் தான் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் நினைவூட்டிய டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்திலும் உரிய நேரத்தில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வழக்கமாக தேர்தல் காலங்களில் எமக்கெதிராக முன்னெடுக்கப்படும் சேறடிப்புக்கள் தற்போது தேர்தலுக்கு முன்பதாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அரசியல் ரீதியாக எம்மை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நப்பாசையில் அவ்வப்போது செய்திகளை வெளியிட்டு வருகின்ற பத்திரிகை தற்போதும் தவறான தகவல்களை வெளியிடுள்ளது.
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளவும் இல்லை, யாரும் எமது அலுவலகத்திற்கு வரவும் இல்லை.
சமூக மற்றும் கூட்டு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை ரண்முனி ஜீட் வர்ணன் றொஹான் சில்வா என்பவர் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதாவது, அசாத் மௌலானா சனல் 4 தெலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் சொல்லப்பட்ட விடயங்களின் உண்மைத் தன்மைமை உறுதிப்படுத்துமாறு குறித்த முறைப்பாட்டில் சொல்லப்பட்டு்ள்ளது.
அந்தவகையில், என்னுடன் தனக்கு தொடர்பு இருந்ததாக அசாத் மௌலானா சொல்லியிருந்தவை தொடர்பான எனது வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காகவே அழைக்கப்பட்டிருந்தேன்.
மேலும், குறித்த சந்தர்ப்பத்தில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் தான் வழங்கிய பதில்கள் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கமளித்தார்.
திலீபன் சிலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவானது – டக்ளஸ் திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் சமகால அரசியல் குறித்து ஊடக சந்திப்பை முன்னெடுத்திருந்த அவர் மேலும் கூறுகையில் - அந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், மறுபுறம் தமிழ் அரசியல் கட்சிகள் தமக்கிடையே குடுமிச் சண்டையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும், இந்த விவகாரத்தை தான் தற்போது பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை எனத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, தனக்கான காலம் வரும்போது அதற்கான உரிய செயற்றிட்டத்தை முன்வைப்பேன் எனவும் கூறியுள்ளார்.கடந்த காலங்களிலும் யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரப் பகுதியில் மும்மன்னர்களின் சிலை, உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் சிலை, முத்திரைச் சந்தியில் சங்கிலியனின் கம்பீரமான சிலை மற்றும் மடத்தகடியில் தனிகாசலம் அடிகளாரின் சிலை உள்ளிட்டவற்றை நிறுவுவதில் தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழ் மக்களின் வரலாற்று அடையாளங்களைப் பாதுகாக்கும் விடயத்தில் கடந்த காலங்களில் தான் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் நினைவூட்டிய டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்திலும் உரிய நேரத்தில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.மேலும் வழக்கமாக தேர்தல் காலங்களில் எமக்கெதிராக முன்னெடுக்கப்படும் சேறடிப்புக்கள் தற்போது தேர்தலுக்கு முன்பதாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக அரசியல் ரீதியாக எம்மை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நப்பாசையில் அவ்வப்போது செய்திகளை வெளியிட்டு வருகின்ற பத்திரிகை தற்போதும் தவறான தகவல்களை வெளியிடுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளவும் இல்லை, யாரும் எமது அலுவலகத்திற்கு வரவும் இல்லை.சமூக மற்றும் கூட்டு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை ரண்முனி ஜீட் வர்ணன் றொஹான் சில்வா என்பவர் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.அதாவது, அசாத் மௌலானா சனல் 4 தெலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் சொல்லப்பட்ட விடயங்களின் உண்மைத் தன்மைமை உறுதிப்படுத்துமாறு குறித்த முறைப்பாட்டில் சொல்லப்பட்டு்ள்ளது.அந்தவகையில், என்னுடன் தனக்கு தொடர்பு இருந்ததாக அசாத் மௌலானா சொல்லியிருந்தவை தொடர்பான எனது வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காகவே அழைக்கப்பட்டிருந்தேன்.மேலும், குறித்த சந்தர்ப்பத்தில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் தான் வழங்கிய பதில்கள் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கமளித்தார்.