• Nov 25 2024

திருடிய நகைகளை விற்று தொலைக்காட்சி பெட்டி வாங்கிய குழுவினர்...! பொலிஸார் அதிரடி...!samugammedia

Sharmi / Jan 19th 2024, 4:01 pm
image

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான நகை திருட்டில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 13ம் திகதி முழங்காவில் குமிழமுனை பகுதியிலுள்ள வீடொன்றில் ஆட்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் தாலிக்கொடி திருடப்பட்டதாக முழங்காவில் பொலிசில் முறைப்பாடு வீட்டு உரிமையாளரினால் பொலிஸாரிடம் முறையிடப்பட்டது.

இந்நிலையில்,  கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட முழங்காவில் பொலிஸ் நிலைய  பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர்,  முழங்காவில் பகுதியில் சந்தேக நபர்களை கைது செய்ததுடன் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள நகை விற்பனை நிலையம் ஒன்றில் குறித்த தாலிக்  கொடி விற்பனை செய்யப்பட்டதாக தெரியவந்தது

இந்நிலையில் குறித்த நகையை பொலிசார் மீட்டதுடன்  குறித்த சந்தேக நபர்கள் நகையை விற்று தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவர்கள் கொள்வனவு செய்த பொருட்களையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் நகையையும் பொலிசார் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.




திருடிய நகைகளை விற்று தொலைக்காட்சி பெட்டி வாங்கிய குழுவினர். பொலிஸார் அதிரடி.samugammedia கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான நகை திருட்டில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த 13ம் திகதி முழங்காவில் குமிழமுனை பகுதியிலுள்ள வீடொன்றில் ஆட்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் தாலிக்கொடி திருடப்பட்டதாக முழங்காவில் பொலிசில் முறைப்பாடு வீட்டு உரிமையாளரினால் பொலிஸாரிடம் முறையிடப்பட்டது.இந்நிலையில்,  கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட முழங்காவில் பொலிஸ் நிலைய  பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர்,  முழங்காவில் பகுதியில் சந்தேக நபர்களை கைது செய்ததுடன் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள நகை விற்பனை நிலையம் ஒன்றில் குறித்த தாலிக்  கொடி விற்பனை செய்யப்பட்டதாக தெரியவந்ததுஇந்நிலையில் குறித்த நகையை பொலிசார் மீட்டதுடன்  குறித்த சந்தேக நபர்கள் நகையை விற்று தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து அவர்கள் கொள்வனவு செய்த பொருட்களையும் பொலிசார் மீட்டுள்ளனர்.இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் நகையையும் பொலிசார் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement