• Jan 30 2025

தகாத உறவால் நடந்த பயங்கரம்; கள்ளக்காதலனை கொன்ற கணவன்! ஆபத்தான நிலையில் மனைவி

Chithra / Jan 29th 2025, 8:20 am
image


புத்தளம் - மாதம்பே பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஆண் ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

மாதம்பே பழைய நகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில்இந்த நம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மாதம்பே பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

காயமடைந்த இருவரையும் உடனடியாக சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் ஆண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாதம்பே பகுதியில் வசித்து வந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

காயமடைந்த பெண்ணின் கணவர் இந்தக் கொலையைச் செய்ததாகவும், 

தகாத உறவே கொலைக்குக் காரணம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையை செய்த சந்தேக நபர் நேற்று இரவு மாதம்பே பொலிஸ் பிரிவின் பட்டியகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பட்டியகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தகாத உறவால் நடந்த பயங்கரம்; கள்ளக்காதலனை கொன்ற கணவன் ஆபத்தான நிலையில் மனைவி புத்தளம் - மாதம்பே பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஆண் ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மாதம்பே பழைய நகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில்இந்த நம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மாதம்பே பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.காயமடைந்த இருவரையும் உடனடியாக சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் ஆண் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் மாதம்பே பகுதியில் வசித்து வந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.காயமடைந்த பெண்ணின் கணவர் இந்தக் கொலையைச் செய்ததாகவும், தகாத உறவே கொலைக்குக் காரணம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொலையை செய்த சந்தேக நபர் நேற்று இரவு மாதம்பே பொலிஸ் பிரிவின் பட்டியகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பட்டியகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement