திருகோணமலை மாவட்டம் சேருநுவர – சோமபுர பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், கணவனை இழந்த பெண் ஒருவரின் வீடும் கடையும் முற்றாக இடிந்து விழுந்துள்ளன. இதனால் அவர் தனது பிள்ளைகளுடன் தங்குமிடமின்றி உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சிறிய கடை ஒன்றை ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில், வெள்ள நீர் கடையையும் அதிலிருந்த பொருட்களையும் அடித்துச் சென்றதுடன், அவர்கள் வசித்து வந்த வீட்டையும் முழுமையாக சேதப்படுத்தியுள்ளது.
கணவனை இழந்து தனியாக போராடி வந்த இந்தத் தாய், தற்போது வாழ்வாதாரத்தையும் வசிப்பிடத்தையும் ஒரே நேரத்தில் இழந்து கடும் நெருக்கடியில் உள்ளார்.
“பிள்ளைகளைக் காப்பாற்றவே கடையை ஆரம்பித்தேன். ஆனால் வெள்ளம் எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு போய்விட்டது, என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உடனடியாக உதவ முன்வர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெள்ளத்தால் இடிந்து விழுந்த வீடும், கடையும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தாய் திருகோணமலை மாவட்டம் சேருநுவர – சோமபுர பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், கணவனை இழந்த பெண் ஒருவரின் வீடும் கடையும் முற்றாக இடிந்து விழுந்துள்ளன. இதனால் அவர் தனது பிள்ளைகளுடன் தங்குமிடமின்றி உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சிறிய கடை ஒன்றை ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில், வெள்ள நீர் கடையையும் அதிலிருந்த பொருட்களையும் அடித்துச் சென்றதுடன், அவர்கள் வசித்து வந்த வீட்டையும் முழுமையாக சேதப்படுத்தியுள்ளது.கணவனை இழந்து தனியாக போராடி வந்த இந்தத் தாய், தற்போது வாழ்வாதாரத்தையும் வசிப்பிடத்தையும் ஒரே நேரத்தில் இழந்து கடும் நெருக்கடியில் உள்ளார்.“பிள்ளைகளைக் காப்பாற்றவே கடையை ஆரம்பித்தேன். ஆனால் வெள்ளம் எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு போய்விட்டது, என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உடனடியாக உதவ முன்வர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.