• May 09 2026

ஈரானிய எண்ணெய்க் கப்பல்களை செயலிழக்கச் செய்த அமெரிக்கா!

Ziya / May 9th 2026, 2:21 pm
image

https://www.facebook.com/share/v/1HebkqLX5L/


ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானியத் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள அமெரிக்கக் கடற்படை, தனது தடையை மீறி நுழைய முயன்ற இரண்டு பெரும் ஈரானிய எண்ணெய்க் கப்பல்களைத் துல்லியமானத் தாக்குதல் மூலம் செயலிழக்கச் செய்துள்ளது.


அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) வெளியிட்டுள்ள தகவலின்படி:


ஈரானியத் துறைமுகங்களை நோக்கி முன்னேறிய 'சீ ஸ்டார் III' (Sea Star III) மற்றும் 'செவ்டா' (Sevda) ஆகிய இரண்டு ஈரானியக் கொடி ஏந்திய எண்ணெய்க் கப்பல்கள்  இலக்குள்ளாகியுள்ளது.


அமெரிக்காவின் பிரம்மாண்டமான விமானம் தாங்கிப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் (USS George H.W. Bush) கப்பலில் இருந்து ஏவப்பட்ட எஃப்/ஏ-18 சூப்பர் ஹார்னெட் (F/A-18 Super Hornet) போர் விமானங்களே தாக்குதல் நடத்தியுள்ளது.


கப்பல்களை முற்றிலுமாக அழிக்காமல், அவற்றின் எஞ்சின் பகுதியை முடக்கும் நோக்கில், கப்பல்களின் புகைபோக்கிகள் (Smokestacks) மீது துல்லியமான குண்டுகளை வீசி அமெரிக்கப் படைகள் அதிரடி காட்டின.


கடந்த ஏப்ரல் 13 முதல் அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையை (Naval Blockade) மீறி இந்தக் கப்பல்கள் ஈரானுக்குள் நுழைய முயன்றதே இத்தாக்குதலுக்குக் காரணமாகும் 


ஈரானின் பொருளாதாரத்தை முடக்கி, அந்நாடு அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடச் செய்வதற்காக அதிபர் டிரம்ப் இந்த முற்றுகையை அமல்படுத்தியுள்ளார்.


இந்தக் கப்பல்கள் தற்போது நகர முடியாமல் நடுக்கடலில் முடங்கிக் கிடக்கின்றன. ஈரானுக்குச் செல்லும் அவற்றின் பயணம் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது.



ஈரானிய எண்ணெய்க் கப்பல்களை செயலிழக்கச் செய்த அமெரிக்கா https://www.facebook.com/share/v/1HebkqLX5L/ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானியத் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள அமெரிக்கக் கடற்படை, தனது தடையை மீறி நுழைய முயன்ற இரண்டு பெரும் ஈரானிய எண்ணெய்க் கப்பல்களைத் துல்லியமானத் தாக்குதல் மூலம் செயலிழக்கச் செய்துள்ளது.அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) வெளியிட்டுள்ள தகவலின்படி:ஈரானியத் துறைமுகங்களை நோக்கி முன்னேறிய 'சீ ஸ்டார் III' (Sea Star III) மற்றும் 'செவ்டா' (Sevda) ஆகிய இரண்டு ஈரானியக் கொடி ஏந்திய எண்ணெய்க் கப்பல்கள்  இலக்குள்ளாகியுள்ளது.அமெரிக்காவின் பிரம்மாண்டமான விமானம் தாங்கிப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் (USS George H.W. Bush) கப்பலில் இருந்து ஏவப்பட்ட எஃப்/ஏ-18 சூப்பர் ஹார்னெட் (F/A-18 Super Hornet) போர் விமானங்களே தாக்குதல் நடத்தியுள்ளது.கப்பல்களை முற்றிலுமாக அழிக்காமல், அவற்றின் எஞ்சின் பகுதியை முடக்கும் நோக்கில், கப்பல்களின் புகைபோக்கிகள் (Smokestacks) மீது துல்லியமான குண்டுகளை வீசி அமெரிக்கப் படைகள் அதிரடி காட்டின.கடந்த ஏப்ரல் 13 முதல் அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையை (Naval Blockade) மீறி இந்தக் கப்பல்கள் ஈரானுக்குள் நுழைய முயன்றதே இத்தாக்குதலுக்குக் காரணமாகும் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கி, அந்நாடு அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடச் செய்வதற்காக அதிபர் டிரம்ப் இந்த முற்றுகையை அமல்படுத்தியுள்ளார்.இந்தக் கப்பல்கள் தற்போது நகர முடியாமல் நடுக்கடலில் முடங்கிக் கிடக்கின்றன. ஈரானுக்குச் செல்லும் அவற்றின் பயணம் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement