யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் மாணவனைத் தாக்கிய ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வட்டுக்கோட்டை, சித்தங்கேணிப் பகுதியில் தனியார் கல்வி நிறுவனமொன்றில் வகுப்புக்கு வருகைதரும் மாணவன் ஒருவர் 'பட்டப் பெயர்' கூறி அழைத்ததாகத் தெரிவித்து, மாணவரை ஆசிரியர் வகுப்புவேளையில் அடித்துத் தாக்கியுள்ளார்.
இந்நிலையில், மாணவனின் பெற்றோர் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
இதன்போது கைது செய்யப்பட்ட தனியார் கல்வி நிலைய ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
'பட்டப் பெயர்' கூறி அழைத்த மாணவனை தாக்கியதால் விபரீதம்; யாழில் ஆசிரியருக்கு அதிரடி உத்தரவு யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் மாணவனைத் தாக்கிய ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வட்டுக்கோட்டை, சித்தங்கேணிப் பகுதியில் தனியார் கல்வி நிறுவனமொன்றில் வகுப்புக்கு வருகைதரும் மாணவன் ஒருவர் 'பட்டப் பெயர்' கூறி அழைத்ததாகத் தெரிவித்து, மாணவரை ஆசிரியர் வகுப்புவேளையில் அடித்துத் தாக்கியுள்ளார்.இந்நிலையில், மாணவனின் பெற்றோர் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.இதன்போது கைது செய்யப்பட்ட தனியார் கல்வி நிலைய ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.