• Sep 20 2024

நீதித்துறை சுதந்திரமாக செயற்படும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்..! சட்டத்தரணிகள் வேண்டுகோள் samugammedi

Chithra / Jul 11th 2023, 6:48 pm
image

Advertisement

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சிறப்புரிமையை  பயன்படுத்தி  சட்டத்துறைக்கும்,  நீதித்துறைக்கும் சவாலை ஏற்படுத்தும் விதமாக நீதிபதிகளை அச்சுறுத்தும் வகையிலான  பேச்சுக்கள் இந் நாட்டில் நீதித்துறைக்குள்ள பெரிய சவால் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். 

பௌத்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு  சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ள கருத்திற்கு வடக்கு மாகாண சட்டத்தரணிகள் கண்டித்து கவனயீர்ப்பினை வெளிக்கொண்டு வந்துள்ளார்கள்.

கவனயீர்ப்பின்  பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்தும் அவர்கள் தெரிவிக்கையில், 

முல்லைத்தீவு மாவட்ட  நீதிபதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவால் மேற்கொள்ளப்பட்ட உரை தொடர்பில் நீதிமன்ற அவமதிப்பைக் கருத்திற் கொண்டு இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்ட்ட பகுதியில் சட்டத்தரணிகள் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

இதேபோல், இங்கு இவர்களுக்கு ஆதரவளிக்குமுகமாக மன்னார் மாவடடத்திலிருந்து சில சட்டத்தரணிகளும் கலந்து கொண்டதுடன் மன்னார் மாவட்டத்திலும் பணி்க்குச் செல்லாமல் புறக்கணித்துள்ளனர்.

பாராளுமன்றம் சட்டத்தை இயற்றுகின்ற சபையாக காணப்படுகையில் அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர் தனது சிறப்புரிமையை  பயன்படுத்தி  சட்டத்துறைக்கும் நீதித்துறைக்கும் சவாலை ஏற்படுத்துமுகமாகவும் நீதிபதிகளை அச்சுறுத்துமுகமாகவும்  வகையிலான  பேச்சுக்கள் இந் நாட்டில் நீதித்துறைக்குள்ள பெரிய சவாலாகவுள்ளது.

எனவே எதிர்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுட்பட ஏனையவர்கள் அனைவரும் நீதித்துறையை மதித்து நீதித்துறை சுதந்திரமாக தனது கடமையை மேற்கொள்வதற்குமேற்ற வகையில் நடக்க வேண்டுமென்பதற்காகவே இன்றைய தினம்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


நீதித்துறை சுதந்திரமாக செயற்படும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். சட்டத்தரணிகள் வேண்டுகோள் samugammedi பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சிறப்புரிமையை  பயன்படுத்தி  சட்டத்துறைக்கும்,  நீதித்துறைக்கும் சவாலை ஏற்படுத்தும் விதமாக நீதிபதிகளை அச்சுறுத்தும் வகையிலான  பேச்சுக்கள் இந் நாட்டில் நீதித்துறைக்குள்ள பெரிய சவால் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். பௌத்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு  சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ள கருத்திற்கு வடக்கு மாகாண சட்டத்தரணிகள் கண்டித்து கவனயீர்ப்பினை வெளிக்கொண்டு வந்துள்ளார்கள்.கவனயீர்ப்பின்  பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் அவர்கள் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்ட  நீதிபதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவால் மேற்கொள்ளப்பட்ட உரை தொடர்பில் நீதிமன்ற அவமதிப்பைக் கருத்திற் கொண்டு இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்ட்ட பகுதியில் சட்டத்தரணிகள் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.இதேபோல், இங்கு இவர்களுக்கு ஆதரவளிக்குமுகமாக மன்னார் மாவடடத்திலிருந்து சில சட்டத்தரணிகளும் கலந்து கொண்டதுடன் மன்னார் மாவட்டத்திலும் பணி்க்குச் செல்லாமல் புறக்கணித்துள்ளனர்.பாராளுமன்றம் சட்டத்தை இயற்றுகின்ற சபையாக காணப்படுகையில் அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர் தனது சிறப்புரிமையை  பயன்படுத்தி  சட்டத்துறைக்கும் நீதித்துறைக்கும் சவாலை ஏற்படுத்துமுகமாகவும் நீதிபதிகளை அச்சுறுத்துமுகமாகவும்  வகையிலான  பேச்சுக்கள் இந் நாட்டில் நீதித்துறைக்குள்ள பெரிய சவாலாகவுள்ளது.எனவே எதிர்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுட்பட ஏனையவர்கள் அனைவரும் நீதித்துறையை மதித்து நீதித்துறை சுதந்திரமாக தனது கடமையை மேற்கொள்வதற்குமேற்ற வகையில் நடக்க வேண்டுமென்பதற்காகவே இன்றைய தினம்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement