• Sep 20 2024

கற்றல் செயல்முறை, அடக்குமுறைகளே மாணவர்கள் விபரீத முடிவெடுக்க காரணம்..! - வைத்தியர் அதிர்ச்சி தகவல் samugammedia

Chithra / Jun 17th 2023, 4:39 pm
image

Advertisement

பல்கலைக்கழக சூழலில் காணப்படும் சில அடக்குமுறை நிலைமைகள் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ள நேரிட்டுள்ளது.

சில பல்கலைக்கழகங்களில் கற்றல் செயல்முறை அழுத்தம் அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் உளவியலாளர் ரூமி ரூபன் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பல்கலைக்கழகங்களில் கற்றல் செயல்முறை அழுத்தம் அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற காரணங்களால் மாணவர்கள் இத்தகைய துரதிர்ஷ்டவசமான நிலைக்கு ஆளாக நேரிடும்.

மேலும், பொருளாதார அழுத்தம், மனச்சோர்வு போன்ற காரணங்களும் இந்த நிலையை மோசமாக்கும்.

மாணவர்களுக்கு சிறு வயதிலிருந்தே தமது பெற்றோர்கள் அனைத்து வேலைகளையும் செய்வதால் சில பிரச்சினைகளை சமாளிக்கும் திறனை இழக்கின்றனர்.

சில மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் பிரவேசித்ததன் பின்னர், அங்கு காணப்படும் சமூகத்துடன் ஒன்றிணைந்து செல்வதில் பல்வேறு  பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். 

பல மாணவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடுதிகளில் தனிமையில் இருப்பதால் பல்வேறு மன உளைச்சலுக்கு முகங்கொடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


கற்றல் செயல்முறை, அடக்குமுறைகளே மாணவர்கள் விபரீத முடிவெடுக்க காரணம். - வைத்தியர் அதிர்ச்சி தகவல் samugammedia பல்கலைக்கழக சூழலில் காணப்படும் சில அடக்குமுறை நிலைமைகள் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ள நேரிட்டுள்ளது.சில பல்கலைக்கழகங்களில் கற்றல் செயல்முறை அழுத்தம் அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் உளவியலாளர் ரூமி ரூபன் தெரிவித்தார்.அவர் மேலும் குறிப்பிட்டதாவது,பல்கலைக்கழகங்களில் கற்றல் செயல்முறை அழுத்தம் அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற காரணங்களால் மாணவர்கள் இத்தகைய துரதிர்ஷ்டவசமான நிலைக்கு ஆளாக நேரிடும்.மேலும், பொருளாதார அழுத்தம், மனச்சோர்வு போன்ற காரணங்களும் இந்த நிலையை மோசமாக்கும்.மாணவர்களுக்கு சிறு வயதிலிருந்தே தமது பெற்றோர்கள் அனைத்து வேலைகளையும் செய்வதால் சில பிரச்சினைகளை சமாளிக்கும் திறனை இழக்கின்றனர்.சில மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் பிரவேசித்ததன் பின்னர், அங்கு காணப்படும் சமூகத்துடன் ஒன்றிணைந்து செல்வதில் பல்வேறு  பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். பல மாணவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடுதிகளில் தனிமையில் இருப்பதால் பல்வேறு மன உளைச்சலுக்கு முகங்கொடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement