• Mar 17 2026

நண்டால் பறிபோன டிக்டொக் பிரபலத்தின் உயிர்

Chithra / Feb 12th 2026, 8:44 pm
image

 சமூக வலைத்தளங்களில் உணவு தொடர்பான காணொளிகளைப் பதிவிடும் 51 வயதான பிலிப்பைன்ஸ் பெண்மணி ஒருவர், விஷத்தன்மை கொண்ட நண்டை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்


கடந்த 4 ஆம் திகதி, எம்மா அமித் (Emma Amit) என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து சதுப்புநிலக் காட்டில் கடல் உணவுகளைச் சேகரித்துள்ளார்.


தான் பிடித்த நண்டுகளை தேங்காய்ப் பாலில் சமைத்து உண்பதை அவர் தனது டிக்டொக் மற்றும் பேஸ்புக் பக்கங்களுக்காகப் படம் பிடித்துள்ளார்.


உணவு உட்கொண்ட அடுத்த நாள், நண்டிலுள்ள நச்சுத்தன்மை காரணமாக அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.


வலிப்பு மற்றும் உதடுகள் நீல நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகளுடன் அவர் மயக்கமடைந்ததை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


சம்பவம் குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவரது வீட்டுக் குப்பையில் பிரகாசமான நிறம் கொண்ட நண்டுகளின் ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.


இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த பகுதியில் வசிக்கும் மக்களை இத்தகைய நண்டுகளை உண்ண வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நண்டால் பறிபோன டிக்டொக் பிரபலத்தின் உயிர்  சமூக வலைத்தளங்களில் உணவு தொடர்பான காணொளிகளைப் பதிவிடும் 51 வயதான பிலிப்பைன்ஸ் பெண்மணி ஒருவர், விஷத்தன்மை கொண்ட நண்டை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்கடந்த 4 ஆம் திகதி, எம்மா அமித் (Emma Amit) என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து சதுப்புநிலக் காட்டில் கடல் உணவுகளைச் சேகரித்துள்ளார்.தான் பிடித்த நண்டுகளை தேங்காய்ப் பாலில் சமைத்து உண்பதை அவர் தனது டிக்டொக் மற்றும் பேஸ்புக் பக்கங்களுக்காகப் படம் பிடித்துள்ளார்.உணவு உட்கொண்ட அடுத்த நாள், நண்டிலுள்ள நச்சுத்தன்மை காரணமாக அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.வலிப்பு மற்றும் உதடுகள் நீல நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகளுடன் அவர் மயக்கமடைந்ததை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சம்பவம் குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவரது வீட்டுக் குப்பையில் பிரகாசமான நிறம் கொண்ட நண்டுகளின் ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த பகுதியில் வசிக்கும் மக்களை இத்தகைய நண்டுகளை உண்ண வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement