அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக தோட்ட தொழிலாளிகளினுடைய வாழ்வாதாரம் மற்றும் வாழ்வதற்குரிய வசதிகள் ஒழிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.
கலகொட, மவுன்யு தோட்டக் காணிகள் அரசின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் வேறு திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும், மறுசீரமைப்பின் கீழ் அந்த தோட்டத்தில் வாழக் கூடிய மக்களினது லயன் குடியிருப்புகளும், அவர்களின் epf etf நிலுவைகளும் அப்படியே உள்ளன என்றும், இவ்வாறான நிலையில் வெளியாருக்கு தோட்டத்தின் பெரும் பகுதியை கொடுத்தவுடன் தொழிலாளிகளினுடைய வாழ்வாதாரம், வருமானம், வாழ்வதற்குரிய வசதிகள் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்றையதினம் இடம்பெறும் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் லயன்களுக்கு பதிலான காணிகளை பெற்றுக் கொடுத்தல், epf etf நிதிகளை பெற்றுக் கொடுத்தல், வாழ்வாதார காணிகளை பெற்றுக் கொடுத்தல் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன? என்று நிதி மற்றும் அரச வருமான அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிடம் வேலுகுமார் எம்பி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர்,
குறித்த தோட்டங்களுக்கு நேரடியாக சென்று நிலைமைகளை தான் பார்வையிட்டதாகவும், மதிப்பீடு தொடர்பாகவும் மதிப்பீட்டு திணைக்களத்தை அழைத்து வினவியதாகவும், இப்போது நீங்கள் கூறிய விடயங்களை கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் பெருந்தோட்ட மறுசீரமைப்பின் மாதிரியாக பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும், இந்தக் கருத்துகளையும் இணைத்துக் கொண்டு சிறந்த தீர்வை பெற்றுக் கொள்வது தான் அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தோட்டக் காணிகள் மறுசீரமைப்பு திட்டத்தால் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு. சபையில் வேலுகுமார் எம்.பி சுட்டிக்காட்டு.samugammedia அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக தோட்ட தொழிலாளிகளினுடைய வாழ்வாதாரம் மற்றும் வாழ்வதற்குரிய வசதிகள் ஒழிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.கலகொட, மவுன்யு தோட்டக் காணிகள் அரசின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் வேறு திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும், மறுசீரமைப்பின் கீழ் அந்த தோட்டத்தில் வாழக் கூடிய மக்களினது லயன் குடியிருப்புகளும், அவர்களின் epf etf நிலுவைகளும் அப்படியே உள்ளன என்றும், இவ்வாறான நிலையில் வெளியாருக்கு தோட்டத்தின் பெரும் பகுதியை கொடுத்தவுடன் தொழிலாளிகளினுடைய வாழ்வாதாரம், வருமானம், வாழ்வதற்குரிய வசதிகள் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இன்றையதினம் இடம்பெறும் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.தோட்டத் தொழிலாளர்களின் லயன்களுக்கு பதிலான காணிகளை பெற்றுக் கொடுத்தல், epf etf நிதிகளை பெற்றுக் கொடுத்தல், வாழ்வாதார காணிகளை பெற்றுக் கொடுத்தல் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன என்று நிதி மற்றும் அரச வருமான அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிடம் வேலுகுமார் எம்பி கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்த அமைச்சர், குறித்த தோட்டங்களுக்கு நேரடியாக சென்று நிலைமைகளை தான் பார்வையிட்டதாகவும், மதிப்பீடு தொடர்பாகவும் மதிப்பீட்டு திணைக்களத்தை அழைத்து வினவியதாகவும், இப்போது நீங்கள் கூறிய விடயங்களை கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் பெருந்தோட்ட மறுசீரமைப்பின் மாதிரியாக பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும், இந்தக் கருத்துகளையும் இணைத்துக் கொண்டு சிறந்த தீர்வை பெற்றுக் கொள்வது தான் அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.