• Sep 20 2024

பைத்தியக்காரர்களே 13 இற்கு எதிராகப் போர்க்கொடி! - சந்திரிகா கடும் காட்டம் SamugamMedia

Chithra / Feb 21st 2023, 9:46 am
image

Advertisement

"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கொதித்தெழும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மனநோயாளிகள் என்றே சொல்ல வேண்டும். முதலில் அவர்கள் நாட்டிலுள்ள சட்டங்களின் பரிந்துரைகளை முழுமையாக வாசிக்க வேண்டும்." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆளும், எதிரணியில் உள்ள எம்.பிக்கள் சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்குப் பதில் வழங்கும் போதே சந்திரிகா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட  இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் காரணமாக 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இலங்கை நாடாளுமன்றத்தின் அனுமதியுடன்தான் இந்தத் திருத்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது.

ஆனால், இந்தத் திருத்தச் சட்டத்தில் உள்ள பரிந்துரைகள் இன்னமும் முழுமையாக அமுலாகவில்லை. அதனை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.

அதிகாரங்களைப் பகிராமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது" - என்றார்.

பைத்தியக்காரர்களே 13 இற்கு எதிராகப் போர்க்கொடி - சந்திரிகா கடும் காட்டம் SamugamMedia "அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கொதித்தெழும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மனநோயாளிகள் என்றே சொல்ல வேண்டும். முதலில் அவர்கள் நாட்டிலுள்ள சட்டங்களின் பரிந்துரைகளை முழுமையாக வாசிக்க வேண்டும்." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆளும், எதிரணியில் உள்ள எம்.பிக்கள் சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்குப் பதில் வழங்கும் போதே சந்திரிகா மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட  இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் காரணமாக 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இலங்கை நாடாளுமன்றத்தின் அனுமதியுடன்தான் இந்தத் திருத்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது.ஆனால், இந்தத் திருத்தச் சட்டத்தில் உள்ள பரிந்துரைகள் இன்னமும் முழுமையாக அமுலாகவில்லை. அதனை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.அதிகாரங்களைப் பகிராமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது" - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement