• Dec 13 2024

மின்சார சபையை ஆக்கிரமித்துள்ள மாபியா; மின்கட்டணம் குறையாது..! அதிர்ச்சித் தகவல்

Chithra / Dec 12th 2024, 3:21 pm
image

 

மின்சார சபையை ஆக்கிரமித்துள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாமல் மின்கட்டணத்தை குறைக்க முடியாது. அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் சேவை கட்டமைப்பில் உள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாவிடின் கோட்டபய ராஜபக்ஷவின் கதியே தற்போதைய ஜனாதிபதிக்கும் ஏற்படும் என இலங்கை மின்சார பொதுசேவை சங்கத்தின் தலைவர் மாலக விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள மின்சார பொது சேவை சங்கத்தின் காரியாலயத்தில்  இன்று (12)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மின்சார சபை ஊழியர்கள் எவரும் போனஸ் கொடுப்பனவை கோரி போராட்டத்தில் ஈடுபடவில்லை. 

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடியாது என்று அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்திருந்தது. 

பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு நாங்களும் போனஸ் கோரி போராட்டத்தில் ஈடுபடவில்லை.

மக்கள் விடுதலை முன்னணியின் மின்சார தொழிற்சங்கம் தான் மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டது.

மின்சார சங்கத்தின் தலைவர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் ரஞ்சன் ஜயலாலுக்கு தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இடமளிக்காத காரணத்தால் அவர் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை தற்போது  குறிப்பிட்டுக்கொள்கிறார்.

ஆட்சிமாற்றம் மாத்திரமே ஏற்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கிறது. 

நீர்மின்னுற்பத்தி துறையின் ஊடாக மின்சாரம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்ற பின்னணியில் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு மின்கட்டணத்தை குறைக்க முடியாது என்று மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மின்சார சபையை ஆக்கிரமித்துள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாமல் மின்பாவனையாளர்களுக்கு ஒருபோதும் நிவாரணமளிக்க முடியாது. 

அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் சேவை கட்டமைப்பில் உள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாவிடின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு நேர்ந்த கதியே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நேரிடும் என்றார்.

மின்சார சபையை ஆக்கிரமித்துள்ள மாபியா; மின்கட்டணம் குறையாது. அதிர்ச்சித் தகவல்  மின்சார சபையை ஆக்கிரமித்துள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாமல் மின்கட்டணத்தை குறைக்க முடியாது. அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் சேவை கட்டமைப்பில் உள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாவிடின் கோட்டபய ராஜபக்ஷவின் கதியே தற்போதைய ஜனாதிபதிக்கும் ஏற்படும் என இலங்கை மின்சார பொதுசேவை சங்கத்தின் தலைவர் மாலக விக்கிரமசிங்க தெரிவித்தார்.கொழும்பில் உள்ள மின்சார பொது சேவை சங்கத்தின் காரியாலயத்தில்  இன்று (12)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,மின்சார சபை ஊழியர்கள் எவரும் போனஸ் கொடுப்பனவை கோரி போராட்டத்தில் ஈடுபடவில்லை. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடியாது என்று அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்திருந்தது. பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு நாங்களும் போனஸ் கோரி போராட்டத்தில் ஈடுபடவில்லை.மக்கள் விடுதலை முன்னணியின் மின்சார தொழிற்சங்கம் தான் மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டது.மின்சார சங்கத்தின் தலைவர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் ரஞ்சன் ஜயலாலுக்கு தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இடமளிக்காத காரணத்தால் அவர் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை தற்போது  குறிப்பிட்டுக்கொள்கிறார்.ஆட்சிமாற்றம் மாத்திரமே ஏற்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கிறது. நீர்மின்னுற்பத்தி துறையின் ஊடாக மின்சாரம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்ற பின்னணியில் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு மின்கட்டணத்தை குறைக்க முடியாது என்று மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளது.மின்சார சபையை ஆக்கிரமித்துள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாமல் மின்பாவனையாளர்களுக்கு ஒருபோதும் நிவாரணமளிக்க முடியாது. அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் சேவை கட்டமைப்பில் உள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாவிடின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு நேர்ந்த கதியே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நேரிடும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement