• Sep 20 2024

வடகொரியாவுக்குள் அதிரடியாக உள்நுழைந்த முக்கிய நாட்டின் இராணுவம்..!களத்தில் இறங்கிய ஐ.நா..!samugammedia

Sharmi / Jul 19th 2023, 12:02 pm
image

Advertisement

அமெரிக்க இராணுவ சிப்பாய் ஒருவர் வட கொரியாவுக்குள் புகுந்த நிலையில் வட கொரியா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ட்ராவிஸ் கிங் என்பவரே இவ்வாறு வட கொரியாவுக்குள் புகுந்துள்ளார் என அமெரிக்கப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தில் இணைந்த இவர், தென் கொரியாவில் உள்ள அமெரிக்கப் படையில் அங்கம் வகித்தவர் இவர்.

தாக்குதல் குற்றமொன்றின் காரணமாக தென் கொரிய சிறையில் 2 மாதங்கள் அடைக்கப்பட்டிருந்த அவர், கடந்த 10 ஆம் திகதி விடுவிக்கப்பட்டார்.

இவர் அனுமதியின்றி வேண்டுமென்றே வட கொரியாவுக்குள் புகுந்துள்ளார் என தென் கொரியாவிலுள்ள அமெரிக்கப் படைகளின் பேச்சாளர் கேணல் ஐசக் டெய்லர் இன்று தெரிவித்துள்ளார்.  

எல்லைப் பகுதியிலுள்ள, ஐநாவினால் கண்காணிக்கப்பட்டு வரும்,  இராணுவ சூனியப் பகுதியை பார்வையிடுவதற்கான சுற்றுலா குழுவொன்றில் இடம்பெற்றிருந்த ட்ராவிஸ் கிங், வட கொரிய எல்லைக்குள் ஓடிச் சென்றார் என செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலைமை தொடர்பில் அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருகிறது எனவும், இது குறித்து விசாரணை நடத்துகிறது எனவும் பெண்டகன் தலைவர் லொயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவினால் ட்ரேவிஸ் கிங் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என நம்பப்படுவதாக கொரியாவிலுள்ள ஐநா படை தெரிவித்துள்ளது.

இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக வட கொரிய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டுவதாகவும் ஐ.நா படை தெரிவித்துள்ளது.

வடகொரியாவுக்குள் அதிரடியாக உள்நுழைந்த முக்கிய நாட்டின் இராணுவம்.களத்தில் இறங்கிய ஐ.நா.samugammedia அமெரிக்க இராணுவ சிப்பாய் ஒருவர் வட கொரியாவுக்குள் புகுந்த நிலையில் வட கொரியா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ட்ராவிஸ் கிங் என்பவரே இவ்வாறு வட கொரியாவுக்குள் புகுந்துள்ளார் என அமெரிக்கப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தில் இணைந்த இவர், தென் கொரியாவில் உள்ள அமெரிக்கப் படையில் அங்கம் வகித்தவர் இவர். தாக்குதல் குற்றமொன்றின் காரணமாக தென் கொரிய சிறையில் 2 மாதங்கள் அடைக்கப்பட்டிருந்த அவர், கடந்த 10 ஆம் திகதி விடுவிக்கப்பட்டார். இவர் அனுமதியின்றி வேண்டுமென்றே வட கொரியாவுக்குள் புகுந்துள்ளார் என தென் கொரியாவிலுள்ள அமெரிக்கப் படைகளின் பேச்சாளர் கேணல் ஐசக் டெய்லர் இன்று தெரிவித்துள்ளார்.  எல்லைப் பகுதியிலுள்ள, ஐநாவினால் கண்காணிக்கப்பட்டு வரும்,  இராணுவ சூனியப் பகுதியை பார்வையிடுவதற்கான சுற்றுலா குழுவொன்றில் இடம்பெற்றிருந்த ட்ராவிஸ் கிங், வட கொரிய எல்லைக்குள் ஓடிச் சென்றார் என செய்தி வெளியாகியுள்ளது.இந்நிலைமை தொடர்பில் அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருகிறது எனவும், இது குறித்து விசாரணை நடத்துகிறது எனவும் பெண்டகன் தலைவர் லொயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.வட கொரியாவினால் ட்ரேவிஸ் கிங் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என நம்பப்படுவதாக கொரியாவிலுள்ள ஐநா படை தெரிவித்துள்ளது. இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக வட கொரிய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டுவதாகவும் ஐ.நா படை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement