• Nov 24 2024

மன்னாரில் இடம்பெற்ற முக்கிய கூட்டம்...! முப்படை அதிகாரிகளும் பங்கேற்பு...!samugammedia

Sharmi / Jan 31st 2024, 2:24 pm
image

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு  மன்னார் மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படும்  நடவடிக்கைகள் தொடர்பான முன்னாயத்த  கலந்துரையாடல் இன்று(31)  காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்   க.கனகேஸ்வரன்  தலைமையில் மன்னார் மாவட்ட செயலக  மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில்  மேலதிக அரசாங்க அதிபர் ,திணைக்கள  தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள்  முப்படை  அதிகாரிகள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட  செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் மன்னார் மாவட்டச் செயலகம் உள்ளடங்களாக அரச திணைக்களங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளின் முன் ஆயத்த நடவடிக்கைகள்  குறித்து ஆராயப்பட்டது.

மேலும், மன்னார் மாவட்டச் செயலகத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய சுதந்திர தின நிகழ்வுகள் குறித்தும் அரசாங்க அதிபரினால் தெளிவுபடுத்தப்பட்டது.

 அன்றைய தினம் இடம்பெற உள்ள மர நடுகை கள்,மாவட்டத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அரச அதிபர் தலைமையில் விரிவாக ஆராயப்பட்டது.

எதிர்வரும் 4ஆம் திகதி காலை சுதந்திர தினத்தையொட்டி படையினர் மற்றும் பாடசாலை மாணவர்களினால் முன்னெடுக்கப்படவுள்ள அணிவகுப்பு மரியாதை நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை ஒத்திகை நிகழ்வாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மன்னாரில் இடம்பெற்ற முக்கிய கூட்டம். முப்படை அதிகாரிகளும் பங்கேற்பு.samugammedia இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு  மன்னார் மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படும்  நடவடிக்கைகள் தொடர்பான முன்னாயத்த  கலந்துரையாடல் இன்று(31)  காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்   க.கனகேஸ்வரன்  தலைமையில் மன்னார் மாவட்ட செயலக  மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடலில்  மேலதிக அரசாங்க அதிபர் ,திணைக்கள  தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள்  முப்படை  அதிகாரிகள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட  செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.இதன்போது எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் மன்னார் மாவட்டச் செயலகம் உள்ளடங்களாக அரச திணைக்களங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளின் முன் ஆயத்த நடவடிக்கைகள்  குறித்து ஆராயப்பட்டது.மேலும், மன்னார் மாவட்டச் செயலகத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய சுதந்திர தின நிகழ்வுகள் குறித்தும் அரசாங்க அதிபரினால் தெளிவுபடுத்தப்பட்டது. அன்றைய தினம் இடம்பெற உள்ள மர நடுகை கள்,மாவட்டத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அரச அதிபர் தலைமையில் விரிவாக ஆராயப்பட்டது.எதிர்வரும் 4ஆம் திகதி காலை சுதந்திர தினத்தையொட்டி படையினர் மற்றும் பாடசாலை மாணவர்களினால் முன்னெடுக்கப்படவுள்ள அணிவகுப்பு மரியாதை நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை ஒத்திகை நிகழ்வாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement