• Nov 24 2024

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி!

Tharun / Mar 21st 2024, 6:02 pm
image

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

எதிர்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவந்த நிலையில் இன்று மாலை பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

அதன்படி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

அந்த வகையில் 42 மேலதிக வாக்குகளால் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சபையில் தோற்கடிக்கப்பட்டது.

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நிறைவேற்றும் போது செயற்பட்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த பிரேரணை மீதான விவாதம் கடந்த இரு நாட்களாக இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டுள்ளது. இதன்போது இந்தப்பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.எதிர்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவந்த நிலையில் இன்று மாலை பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.அதன்படி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.அந்த வகையில் 42 மேலதிக வாக்குகளால் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சபையில் தோற்கடிக்கப்பட்டது.நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நிறைவேற்றும் போது செயற்பட்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்த பிரேரணை மீதான விவாதம் கடந்த இரு நாட்களாக இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டுள்ளது. இதன்போது இந்தப்பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement