• Dec 09 2024

திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்...! பரிதாபமாக பறிபோனது பெண்ணின் உயிர்...!

Sharmi / Jul 4th 2024, 9:39 pm
image

அனுராதபுரம் பிரதேசத்தில் தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்மன்னாவ பஹலகம வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தம்மன்னாவையிலிருந்து பஹலகம நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிள் சாரதியும், பெண் பாதசாரியும் படுகாயமடைந்துள்ள நிலையில் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஹலகம பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் தம்புத்தேகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள். பரிதாபமாக பறிபோனது பெண்ணின் உயிர். அனுராதபுரம் பிரதேசத்தில் தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்மன்னாவ பஹலகம வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தம்மன்னாவையிலிருந்து பஹலகம நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தின் போது மோட்டார் சைக்கிள் சாரதியும், பெண் பாதசாரியும் படுகாயமடைந்துள்ள நிலையில் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பஹலகம பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரது சடலம் தம்புத்தேகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement