• Jan 07 2025

தென்கிழக்கில் வாழுகின்ற முஸ்லிம் சமூகம் அரசியல் தெரியாத அனாதைகளாக இருக்க முடியாது- சப்ராஸ் மன்சூர் வலியுறுத்து..!

Sharmi / Dec 11th 2024, 9:40 am
image

ஏனைய சமூகங்கள் போன்று தென்கிழக்கில் வாழுகின்ற முஸ்லிம் சமூகம் அரசியல் தெரியாத அனாதைகளாக இருக்க முடியாது என தேசிய காங்கிரசின் தேசிய இளைஞர் அமைப்பாளர் சப்ராஸ் மன்சூர் தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான எம்.எம். சப்ராஸ் மன்சூரின் முயற்சியினால், தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவிடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கல்முனை யங் பேட்ஸ் ஜனாஷா நலன்புரி அமைப்புக்கு சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் (500,000.00) பெறுமதியான கதிரைகள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை ஜனாஷா நலன்புரி அமைப்பு காரியாலயத்தில் நேற்று (09) மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில், ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் எம். எம். மர்சூக், செயலாளர் எம். பாயிஸ் உட்பட உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய சப்றாஸ் மன்சூர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,

எம்.எஸ்.காரியப்பர், பெருந்தலைவர் அஷ்ரப் போன்றோர்கள் எமக்கு நீதமான அரசியலை கற்றுத் தந்திருக்கின்றார்கள். அந்த தொடரிலே இருக்கின்ற தென்கிழக்கு முஸ்லிம் சமூகம் அவற்றை பிழையாக பயன்படுத்த முடியாது.

கல்முனையில் இருக்கின்ற மக்கள் குறிப்பாக கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தை பிறருக்கு அடையாளப்படுத்தி காட்டுகின்ற ஒரு சமூகமாகத்தான் நாங்கள் இதுவரை காலமும் இருந்திருக்கிறோம்.

ஆனால் அரசியல் அதிகாரத்தை தங்களது சுயநலன்களுக்காக மாற்றி, அரசியல் செய்தார்கள்.

கடந்த 1989 ஆம் ஆண்டு இதேபோன்று நிலைமை தான் ஏற்பட்டது. பெருந்தலைவர் அஷ்ரப் ஒரு சில வாக்குகளால் இரண்டு ஆசனத்தை அப்போது இழந்தார். அன்றைய காலகட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி மோகம் காணப்பட்டது.ஒரு சமுர்த்தியை தந்தால், ஒரு கூப்பன் கடையை திறந்தால் ஏதோ எமது நாட்டை வல்லரசாக்குவது போன்று எதிர் அரசியல்வாதிகள் அரசியல் பிரச்சாரம் செய்தார்கள்.

இவ்வாறு ஒரு சில வாக்குகளால் பெருந்தலைவர் அஷ்ரப் அப்போது வஞ்சிக்கப்பட்டார்.

ஆனாலும் பெருந்தலைவர் அஷ்ரப்பும் சேகு இஸ்ஸதீனும் பொது அரசியல் மேடைகளை பள்ளிக்கூடங்களாக மாற்றிய வரலாறுகள் இருக்கின்றன.

ஆனால் நாங்கள் காலத்துக்கு காலம் மேடை அலங்காரங்களையும் இரத்தங்களை சூடாக்குகின்ற பேச்சுக்களையும் கேட்டு பிரித்தாளப்பட்டோம்.

அந்தப் பிரித்தாளுகை தான், ஒரு கிலோமீட்டருக்குள் இருக்கின்ற இரண்டு ஊர்கள் ஒற்றுமைப்படுவதற்கு நமக்குள் மனமில்லை. எதைச் சொன்னாலும் எமது மனங்களில் தமிழன், முஸ்லிம், பரங்கியர் மற்றும் சிங்களவன் என்ற கோஷத்தை விதைத்திருக்கிறார்கள். இதனால்தான், பெருந்தலைவர் அஷ்ரப் மரணித்து 24 வருடங்கள் கடந்த பிறகும் இவர்களுக்கு வாக்களிப்பதைவிட வேறு யாருக்காவது வாக்களிக்க வேண்டும் என்ற முடிவில் எல்லா பிரதேச மக்களும் வந்திருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தென்கிழக்கில் வாழுகின்ற முஸ்லிம் சமூகம் அரசியல் தெரியாத அனாதைகளாக இருக்க முடியாது- சப்ராஸ் மன்சூர் வலியுறுத்து. ஏனைய சமூகங்கள் போன்று தென்கிழக்கில் வாழுகின்ற முஸ்லிம் சமூகம் அரசியல் தெரியாத அனாதைகளாக இருக்க முடியாது என தேசிய காங்கிரசின் தேசிய இளைஞர் அமைப்பாளர் சப்ராஸ் மன்சூர் தெரிவித்தார்.தேசிய காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான எம்.எம். சப்ராஸ் மன்சூரின் முயற்சியினால், தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவிடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கல்முனை யங் பேட்ஸ் ஜனாஷா நலன்புரி அமைப்புக்கு சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் (500,000.00) பெறுமதியான கதிரைகள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.கல்முனை ஜனாஷா நலன்புரி அமைப்பு காரியாலயத்தில் நேற்று (09) மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில், ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் எம். எம். மர்சூக், செயலாளர் எம். பாயிஸ் உட்பட உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய சப்றாஸ் மன்சூர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,எம்.எஸ்.காரியப்பர், பெருந்தலைவர் அஷ்ரப் போன்றோர்கள் எமக்கு நீதமான அரசியலை கற்றுத் தந்திருக்கின்றார்கள். அந்த தொடரிலே இருக்கின்ற தென்கிழக்கு முஸ்லிம் சமூகம் அவற்றை பிழையாக பயன்படுத்த முடியாது.கல்முனையில் இருக்கின்ற மக்கள் குறிப்பாக கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தை பிறருக்கு அடையாளப்படுத்தி காட்டுகின்ற ஒரு சமூகமாகத்தான் நாங்கள் இதுவரை காலமும் இருந்திருக்கிறோம். ஆனால் அரசியல் அதிகாரத்தை தங்களது சுயநலன்களுக்காக மாற்றி, அரசியல் செய்தார்கள்.கடந்த 1989 ஆம் ஆண்டு இதேபோன்று நிலைமை தான் ஏற்பட்டது. பெருந்தலைவர் அஷ்ரப் ஒரு சில வாக்குகளால் இரண்டு ஆசனத்தை அப்போது இழந்தார். அன்றைய காலகட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி மோகம் காணப்பட்டது.ஒரு சமுர்த்தியை தந்தால், ஒரு கூப்பன் கடையை திறந்தால் ஏதோ எமது நாட்டை வல்லரசாக்குவது போன்று எதிர் அரசியல்வாதிகள் அரசியல் பிரச்சாரம் செய்தார்கள்.இவ்வாறு ஒரு சில வாக்குகளால் பெருந்தலைவர் அஷ்ரப் அப்போது வஞ்சிக்கப்பட்டார்.ஆனாலும் பெருந்தலைவர் அஷ்ரப்பும் சேகு இஸ்ஸதீனும் பொது அரசியல் மேடைகளை பள்ளிக்கூடங்களாக மாற்றிய வரலாறுகள் இருக்கின்றன.ஆனால் நாங்கள் காலத்துக்கு காலம் மேடை அலங்காரங்களையும் இரத்தங்களை சூடாக்குகின்ற பேச்சுக்களையும் கேட்டு பிரித்தாளப்பட்டோம். அந்தப் பிரித்தாளுகை தான், ஒரு கிலோமீட்டருக்குள் இருக்கின்ற இரண்டு ஊர்கள் ஒற்றுமைப்படுவதற்கு நமக்குள் மனமில்லை. எதைச் சொன்னாலும் எமது மனங்களில் தமிழன், முஸ்லிம், பரங்கியர் மற்றும் சிங்களவன் என்ற கோஷத்தை விதைத்திருக்கிறார்கள். இதனால்தான், பெருந்தலைவர் அஷ்ரப் மரணித்து 24 வருடங்கள் கடந்த பிறகும் இவர்களுக்கு வாக்களிப்பதைவிட வேறு யாருக்காவது வாக்களிக்க வேண்டும் என்ற முடிவில் எல்லா பிரதேச மக்களும் வந்திருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement