• Dec 14 2024

நிலத்திலும் கடலிலும் தமிழர் இறைமையை நிலைநாட்டியவர் தேசியத் தலைவர்-நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து..!

Sharmi / Nov 27th 2024, 10:57 am
image

ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் இறைமையின் சின்னமாக, ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் பெருவிருப்பான சுதந்திரமும், இறைமையும் கொண்ட தமிழினத்தின் வடிவமாகத் திகழ்ந்தவர் எங்கள் தேசியத் தலைவர் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழீழத் தேசியத் தலைவரின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட  வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு  குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது அனைவரினதும் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அண்ணையின் 70வது அகவை வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் நான் பெருமிதமும் மட்டற்ற மகிழ்வும் அடைகிறேன். எங்கள் தேசியத் தலைவர் ஈழத்தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையின் குறியீடாக, ஈழத்தமிழ்த்தேசிய இனத்தின் இறைமையின் சின்னமாக, ஈழத்தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் பெருவிருப்பான சுதந்திரமும், இறைமையும் கொண்ட தமிழினத்தின் வடிவமாகத் திகழ்ந்தவர்.

எங்கள் தேசியத் தலைவரது ஆளுமை ஈழத்தமிழ்த் தேசத்தில் மட்டுமல்லாமல். தமிழர் வாழும் உலகப் பரப்பெங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட தமிழர்களை, தேசியத் தலைவரை, வடதுருவமாக. தன்மானத்தையும், இறைமானத்தையும் காத்தவராக தமிழன் என்று சொல்லடா தலை நிமிந்து நில்லடா என்ற வரிகளுக்கு உயிர் கொடுத்தவராய் பார்த்தவர்கள்; பார்க்கின்றார்கள். ஈழ விடுதலை தொடர்பாக நான் சிங்கப்பூர், மலேசியா. தென்னாபிரிக்கா நாடுகளுக்கு சென்றபோது, அங்குள்ள தமிழர்களின் இல்லங்களில் தலைவருடைய படங்கள் தொங்கவிடப்பட்டிருந்ததை கண்டேன்.

தேசியத் தலைவரின் ஆட்சியை, சோழப்பேரரசின் நீட்சியாக வரலாறு பார்க்கும்.17ஆம் நூற்றாண்டில் Westphalia உடன்படிக்கைகள் மூலம் நாடுகள் உருவாகும் முறை அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், உருவான முதலாவது தமிழர் நாட்டின் பிதாமகன் எங்கள் தேசியத் தலைவர் தலைவரால் அமைக்கப்பட்ட நிகழ்வு பூர்வமான தமிழ் ஈழத்தில் இனவிடுதலை மட்டுமின்றி சமூக நீதியும் அங்கு நிலவியது. பெண் சமத்துவம் பேணப்பட்டது. சாதி வேறுபாடுகள் களையப்பட்டன. சமூகநீதி, மக்களாட்சி ஆகியவற்றின் அடிப்படையிலேயே, நிகழ்வு பூர்வமான தமிழீழம் கட்டியமைக்கப்பட்டது.

தலைவர் தனது வீரத்தின் மூலம் புதிய புறநானூற்றைப் படைத்தவர். தலைவரால் வடிவமைக்கப்பட்ட, நோர்மண்டி (Normandy)தரையிறக்கத்திற்கு ஒப்பான, ஆனையிறவு தரையிறக்கமும், கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதலும், அமெரிக்க இராணுவ கல்லூரிகளில் பாடங்களாக, அறிமுகப்படுத்தப்பட்டதாக ஒரு அமெரிக்க இராஜ தந்திரி கூறினார்.

எத்தனை இடர்கள் வந்தாலும், எத்தனை இழப்புகள் வந்தாலும் தலைவர் அவற்றைத் தாண்டி போரைத் தொடர்ந்தார். 5ஆம் நூற்றாண்டு சீனா இராணுவ மூலோபாய தத்துவாசிரியர் SUN TZU வாளெடுத்து களத்தில் போராடும் வீரத்தைவிட, இழப்புக்களைத் தாங்கிக் கொண்டு போராடும் வீரம் வலிமையானது எனக் கூறினார்.

தேசியத் தலைவர் கோடிக்கணக்கான தமிழ் சொத்துக்கள் அழிக்கப்பட்டபோதும், 100,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டபோதும், 46,000 இற்கும் அதிகமான போராளிகள் கொல்லப்பட்டபோதும் தேசியத் தலைவர் மனம் தளராமல் போரட்டத்தை தொடர்ந்தார். தலைவர் தான் மட்டும் போராடாமல், தனது முழுக் குடும்பத்தையும் போர்க்களத்தில் இறக்கினார். தலைவர் வரலாறு படைக்கும் தமிழ் வீரனாகத் திகழ்ந்தார்.

தலைவர், எங்கள் நிலம் கடலுடன் இணைக்கப்பட்டிருப்பதாக கடற்படையை உருவாக்கினார். தலைவர், தமிழர்களின் இறைமையை, நிலத்துடன் மட்டுமல்ல, நிலத்தைத் தாண்டிய கடலுடனும் நிலை நாட்டினார். தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரையில் தமிழர் இறைமை நிலத்துடனும், நிலத்தை அண்டிய கடலுடனும் உண்டென கூறியிருந்தவர்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், 2013ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தபட்ட சுதந்திர சாசனத்தில் ஈழத்தமிழரின் இறைமை நிலத்துடனும், நிலத்தை அண்டிய கடலுடனும் உண்டென முரசறைந்தது.

தற்போதைய தாயக அரசியல் உரையாடல்களில் கடல் மேலான தமிழரின் இறைமை பேசப்படுவதில்லை. தாயகத் தலைவர்களும், தாயக மக்களும், எமது நிலத்திலும், நிலத்தை அண்டிய கடலிலும் எமக்குள்ள இறைமையை அரசியல் உரையாடல்களில் பிரதிபலிக்கவேண்டும்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஓபாமா2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உரையாறும்போது, “ஆசியாவை நோக்கி” (Pivot to Asia)என்ற புதிய வெளியுறவுக் கொள்கையை அறிவித்தார். இன்று உலகம், அட்லாண்டிக் சமுத்திரத்தில் இருந்து இந்து சமுத்திரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்து சமுத்திரத்தில் வர்த்தகபாதைகளின் முக்கிய இடத்தில் ஈழம் அமைந்துள்ளது. எமது புவியியல் இருப்பிடத்தை நாம் அரசியல் பலமாக மாற்ற வேண்டும்.

தலைவர் ஒருமுறை கூறினார், எங்கள் இன்னல்களைப் பார்த்து, சர்வதேச சமுதாயம் ஆறுதல் சொல்லக்கூடும், அனுதாபப்படக்கூடும், ஆயினும் எங்கள் விடுதலையை நாம்தான் வெல்ல வேண்டும் என்று தலைவர், உலகம் பலத்தின் அடிப்படையிலேயே சுழல்கின்றது என்ற யதார்த்தத்தில் எந்த ஒரு அரசியல் நகர்விற்கும் பலம் இன்றியமையாதது என்ற அடிப்படையிலே அரசியல் நடத்தினார். இன்று எம்மிடம் என்ன பலம் உண்டு என்ற கேள்வி பலரிடம் உண்டு  இராணுவப் பலம் மட்டுமே பலம் அல்ல, எங்கள் கோரிக்கையின் தார்மீகப் பலம். எங்கள் கோரிக்கையின் சட்ட பலம், உலக சிவில் அமைப்புகளின் ஆதரவு, பாதிக்கப்பட்டவர்கள் என்ற எங்கள் நிலைப்பாடு (victim hood), எங்கள் புவியியல் இருப்பிடம், புலம்பெயர் சமூகத்தின் பலம் இவையாவும் எங்கள் பலத்தின் கூறுகள். இன்று எமக்கு முன்னால் சவால் இந்தக் கூறுகளை ஒன்றாக்கி, எங்கள் பலத்தை எவ்வாறு காத்திரமான முறையில் பிரயோகிப்பதே என்பதாகும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலத்திலும் கடலிலும் தமிழர் இறைமையை நிலைநாட்டியவர் தேசியத் தலைவர்-நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து. ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் இறைமையின் சின்னமாக, ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் பெருவிருப்பான சுதந்திரமும், இறைமையும் கொண்ட தமிழினத்தின் வடிவமாகத் திகழ்ந்தவர் எங்கள் தேசியத் தலைவர் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.தமிழீழத் தேசியத் தலைவரின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட  வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு  குறிப்பிடப்பட்டுள்ளது.எமது அனைவரினதும் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அண்ணையின் 70வது அகவை வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் நான் பெருமிதமும் மட்டற்ற மகிழ்வும் அடைகிறேன். எங்கள் தேசியத் தலைவர் ஈழத்தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையின் குறியீடாக, ஈழத்தமிழ்த்தேசிய இனத்தின் இறைமையின் சின்னமாக, ஈழத்தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் பெருவிருப்பான சுதந்திரமும், இறைமையும் கொண்ட தமிழினத்தின் வடிவமாகத் திகழ்ந்தவர். எங்கள் தேசியத் தலைவரது ஆளுமை ஈழத்தமிழ்த் தேசத்தில் மட்டுமல்லாமல். தமிழர் வாழும் உலகப் பரப்பெங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட தமிழர்களை, தேசியத் தலைவரை, வடதுருவமாக. தன்மானத்தையும், இறைமானத்தையும் காத்தவராக தமிழன் என்று சொல்லடா தலை நிமிந்து நில்லடா என்ற வரிகளுக்கு உயிர் கொடுத்தவராய் பார்த்தவர்கள்; பார்க்கின்றார்கள். ஈழ விடுதலை தொடர்பாக நான் சிங்கப்பூர், மலேசியா. தென்னாபிரிக்கா நாடுகளுக்கு சென்றபோது, அங்குள்ள தமிழர்களின் இல்லங்களில் தலைவருடைய படங்கள் தொங்கவிடப்பட்டிருந்ததை கண்டேன்.தேசியத் தலைவரின் ஆட்சியை, சோழப்பேரரசின் நீட்சியாக வரலாறு பார்க்கும்.17ஆம் நூற்றாண்டில் Westphalia உடன்படிக்கைகள் மூலம் நாடுகள் உருவாகும் முறை அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், உருவான முதலாவது தமிழர் நாட்டின் பிதாமகன் எங்கள் தேசியத் தலைவர் தலைவரால் அமைக்கப்பட்ட நிகழ்வு பூர்வமான தமிழ் ஈழத்தில் இனவிடுதலை மட்டுமின்றி சமூக நீதியும் அங்கு நிலவியது. பெண் சமத்துவம் பேணப்பட்டது. சாதி வேறுபாடுகள் களையப்பட்டன. சமூகநீதி, மக்களாட்சி ஆகியவற்றின் அடிப்படையிலேயே, நிகழ்வு பூர்வமான தமிழீழம் கட்டியமைக்கப்பட்டது.தலைவர் தனது வீரத்தின் மூலம் புதிய புறநானூற்றைப் படைத்தவர். தலைவரால் வடிவமைக்கப்பட்ட, நோர்மண்டி (Normandy)தரையிறக்கத்திற்கு ஒப்பான, ஆனையிறவு தரையிறக்கமும், கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதலும், அமெரிக்க இராணுவ கல்லூரிகளில் பாடங்களாக, அறிமுகப்படுத்தப்பட்டதாக ஒரு அமெரிக்க இராஜ தந்திரி கூறினார். எத்தனை இடர்கள் வந்தாலும், எத்தனை இழப்புகள் வந்தாலும் தலைவர் அவற்றைத் தாண்டி போரைத் தொடர்ந்தார். 5ஆம் நூற்றாண்டு சீனா இராணுவ மூலோபாய தத்துவாசிரியர் SUN TZU வாளெடுத்து களத்தில் போராடும் வீரத்தைவிட, இழப்புக்களைத் தாங்கிக் கொண்டு போராடும் வீரம் வலிமையானது எனக் கூறினார். தேசியத் தலைவர் கோடிக்கணக்கான தமிழ் சொத்துக்கள் அழிக்கப்பட்டபோதும், 100,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டபோதும், 46,000 இற்கும் அதிகமான போராளிகள் கொல்லப்பட்டபோதும் தேசியத் தலைவர் மனம் தளராமல் போரட்டத்தை தொடர்ந்தார். தலைவர் தான் மட்டும் போராடாமல், தனது முழுக் குடும்பத்தையும் போர்க்களத்தில் இறக்கினார். தலைவர் வரலாறு படைக்கும் தமிழ் வீரனாகத் திகழ்ந்தார்.தலைவர், எங்கள் நிலம் கடலுடன் இணைக்கப்பட்டிருப்பதாக கடற்படையை உருவாக்கினார். தலைவர், தமிழர்களின் இறைமையை, நிலத்துடன் மட்டுமல்ல, நிலத்தைத் தாண்டிய கடலுடனும் நிலை நாட்டினார். தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரையில் தமிழர் இறைமை நிலத்துடனும், நிலத்தை அண்டிய கடலுடனும் உண்டென கூறியிருந்தவர்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், 2013ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தபட்ட சுதந்திர சாசனத்தில் ஈழத்தமிழரின் இறைமை நிலத்துடனும், நிலத்தை அண்டிய கடலுடனும் உண்டென முரசறைந்தது. தற்போதைய தாயக அரசியல் உரையாடல்களில் கடல் மேலான தமிழரின் இறைமை பேசப்படுவதில்லை. தாயகத் தலைவர்களும், தாயக மக்களும், எமது நிலத்திலும், நிலத்தை அண்டிய கடலிலும் எமக்குள்ள இறைமையை அரசியல் உரையாடல்களில் பிரதிபலிக்கவேண்டும். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஓபாமா2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உரையாறும்போது, “ஆசியாவை நோக்கி” (Pivot to Asia)என்ற புதிய வெளியுறவுக் கொள்கையை அறிவித்தார். இன்று உலகம், அட்லாண்டிக் சமுத்திரத்தில் இருந்து இந்து சமுத்திரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்து சமுத்திரத்தில் வர்த்தகபாதைகளின் முக்கிய இடத்தில் ஈழம் அமைந்துள்ளது. எமது புவியியல் இருப்பிடத்தை நாம் அரசியல் பலமாக மாற்ற வேண்டும்.தலைவர் ஒருமுறை கூறினார், எங்கள் இன்னல்களைப் பார்த்து, சர்வதேச சமுதாயம் ஆறுதல் சொல்லக்கூடும், அனுதாபப்படக்கூடும், ஆயினும் எங்கள் விடுதலையை நாம்தான் வெல்ல வேண்டும் என்று தலைவர், உலகம் பலத்தின் அடிப்படையிலேயே சுழல்கின்றது என்ற யதார்த்தத்தில் எந்த ஒரு அரசியல் நகர்விற்கும் பலம் இன்றியமையாதது என்ற அடிப்படையிலே அரசியல் நடத்தினார். இன்று எம்மிடம் என்ன பலம் உண்டு என்ற கேள்வி பலரிடம் உண்டு  இராணுவப் பலம் மட்டுமே பலம் அல்ல, எங்கள் கோரிக்கையின் தார்மீகப் பலம். எங்கள் கோரிக்கையின் சட்ட பலம், உலக சிவில் அமைப்புகளின் ஆதரவு, பாதிக்கப்பட்டவர்கள் என்ற எங்கள் நிலைப்பாடு (victim hood), எங்கள் புவியியல் இருப்பிடம், புலம்பெயர் சமூகத்தின் பலம் இவையாவும் எங்கள் பலத்தின் கூறுகள். இன்று எமக்கு முன்னால் சவால் இந்தக் கூறுகளை ஒன்றாக்கி, எங்கள் பலத்தை எவ்வாறு காத்திரமான முறையில் பிரயோகிப்பதே என்பதாகும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement