• Dec 14 2024

புதிய அமைச்சரவை இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை- நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்..!

Sharmi / Nov 27th 2024, 9:10 am
image

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவை நியமனங்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

" நாங்கள் இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைச்சரவையை அமைக்கவில்லை. அமைச்சு அதிகாரங்களை கையாள்வதில் மிகவும் திறமையான நபர்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதி சபாநாயகர், பிரதி அமைச்சர் போன்ற பதவிகளை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

முஸ்லீம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டார். குறிப்பிட்ட இனங்கள், மதங்கள் அல்லது சாதிகள் அன்றி, ஒட்டுமொத்த இலங்கை தேசத்துக்கும் சேவை செய்வதை மட்டுமே நாம் கவனம் செலுத்துகிறோம்.

தற்போதைய நிலைமையை இனம் அல்லது மதத்தின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று நாம் முஸ்லிம் சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

ஒன்றிணைந்த இலங்கை தேசம் என்ற தொலைநோக்கு பார்வையுடன் புதிய அரசாங்கத்தையும் அமைச்சரவையையும் நாங்கள் நிறுவியுள்ளோம். 

இந்த அணுகுமுறையானது பிரச்சினைகளை மிகவும் திறம்பட கையாள்வதற்கு எமக்கு இடமளிக்கும் எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவை இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை- நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.புதிய அமைச்சரவை நியமனங்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்." நாங்கள் இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைச்சரவையை அமைக்கவில்லை. அமைச்சு அதிகாரங்களை கையாள்வதில் மிகவும் திறமையான நபர்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.பிரதி சபாநாயகர், பிரதி அமைச்சர் போன்ற பதவிகளை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.முஸ்லீம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டார். குறிப்பிட்ட இனங்கள், மதங்கள் அல்லது சாதிகள் அன்றி, ஒட்டுமொத்த இலங்கை தேசத்துக்கும் சேவை செய்வதை மட்டுமே நாம் கவனம் செலுத்துகிறோம்.தற்போதைய நிலைமையை இனம் அல்லது மதத்தின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று நாம் முஸ்லிம் சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.ஒன்றிணைந்த இலங்கை தேசம் என்ற தொலைநோக்கு பார்வையுடன் புதிய அரசாங்கத்தையும் அமைச்சரவையையும் நாங்கள் நிறுவியுள்ளோம். இந்த அணுகுமுறையானது பிரச்சினைகளை மிகவும் திறம்பட கையாள்வதற்கு எமக்கு இடமளிக்கும் எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement