• Nov 25 2024

புதிய அரசில் அமைச்சரவை உறுப்பினர்கள் 25 பேர்; புதிய பிரதமர் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Chithra / Oct 20th 2024, 11:55 am
image

 

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் நியமிக்கப்படும் அரசாங்கத்தில் தற்போதைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவே பிரதமராக இருப்பார் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை 25 உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்படும்.

அடுத்த ஆண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் டிசம்பரில் முன்‍மொழியப்படும்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் அவசியமா என்பதை கண்டறிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வழங்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்போது வீடுகளில் பணிபுரியும் குழுவாக மாறியுள்ளமை பொலிஸ் அதிகாரிகளையும் அவமதிக்கும் செயலாகும்.

இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்திப்படும் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

புதிய அரசில் அமைச்சரவை உறுப்பினர்கள் 25 பேர்; புதிய பிரதமர் தொடர்பில் வெளியான அறிவிப்பு  எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் நியமிக்கப்படும் அரசாங்கத்தில் தற்போதைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவே பிரதமராக இருப்பார் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை 25 உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்படும்.அடுத்த ஆண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் டிசம்பரில் முன்‍மொழியப்படும்.முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் அவசியமா என்பதை கண்டறிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வழங்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்போது வீடுகளில் பணிபுரியும் குழுவாக மாறியுள்ளமை பொலிஸ் அதிகாரிகளையும் அவமதிக்கும் செயலாகும்.இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்திப்படும் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement