• Nov 23 2024

விரட்டியடிக்கப்பட்ட தலைவர்கள் அணிந்துள்ள புதிய முகமூடி! மீண்டும் ஆட்சிக்குவர தீவிர முயற்சி! அனுர சாடல்

Chithra / Dec 18th 2023, 8:55 am
image

 

எம்மை கஷ்டத்தில் தள்ளிய ஆட்சியாளர்கள், தற்போது புதிதாக முகமூடி அணிந்து கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முயற்சிக்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் மாநாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

கடந்த வருடம் மே, ஜூன் காலப்பகுதியில் விரட்டியடிக்கப்பட்ட தலைவர்கள் குறிப்பாக கொழும்பில் இருந்த மகிந்த ராஜபக்ச எங்கு சென்று மறைந்தார்? திருகோணமலை முகாமில் மறைந்திருந்தார்.

கொழும்பிலிருந்த பசில் மேலே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் இருந்தார். கொழும்பிலிருந்து நாமல், தந்தையுடன் முகாமிற்கு சென்றார். 

கோட்டாபய மாலைத்தீவில் இருந்தார். பின்னர் சிங்கபூருக்கு சென்றார். இவை அனைத்தும் நினைவிருக்கிறதா?

ஆனால் தற்போது மாநாடு ஒன்றை நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் தலைவராக மீண்டும் மகிந்தவை தெரிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் வருகிறார்கள். ஏன் நாட்டை கட்டியெழுப்புவதற்காகவா? மக்கள் அவர்களுக்கு அதிகாரத்தை கொடுப்பார்களா? 

ரணில் விக்ரமசிங்க மற்றும் மகிந்த ஆகிய இரண்டு தரப்பினரும் முன்னர் ஒருவருக்கு ஒருவர் போரிடும் எதிரிகளாக தெரிந்தார்கள். தற்போது அவர்கள் இருவரும் ஒரே அரசாங்கத்தில் இருக்கிறார்கள்.

மகிந்த, கோட்டாபய, பசில், அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட பலர் குற்றவாளிகள். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூட குற்றவாளி. 

நீதிமன்றத்தில் அபராதம் விதித்துள்ளனர். இவ்வாறான ஆட்சியாளர்களின் இருப்பதை நினைத்து நாட்டு மக்கள் வெட்கப்பட வேண்டும்.என கூறியுள்ளார்.

விரட்டியடிக்கப்பட்ட தலைவர்கள் அணிந்துள்ள புதிய முகமூடி மீண்டும் ஆட்சிக்குவர தீவிர முயற்சி அனுர சாடல்  எம்மை கஷ்டத்தில் தள்ளிய ஆட்சியாளர்கள், தற்போது புதிதாக முகமூடி அணிந்து கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முயற்சிக்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் மாநாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த வருடம் மே, ஜூன் காலப்பகுதியில் விரட்டியடிக்கப்பட்ட தலைவர்கள் குறிப்பாக கொழும்பில் இருந்த மகிந்த ராஜபக்ச எங்கு சென்று மறைந்தார் திருகோணமலை முகாமில் மறைந்திருந்தார்.கொழும்பிலிருந்த பசில் மேலே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் இருந்தார். கொழும்பிலிருந்து நாமல், தந்தையுடன் முகாமிற்கு சென்றார். கோட்டாபய மாலைத்தீவில் இருந்தார். பின்னர் சிங்கபூருக்கு சென்றார். இவை அனைத்தும் நினைவிருக்கிறதாஆனால் தற்போது மாநாடு ஒன்றை நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் தலைவராக மீண்டும் மகிந்தவை தெரிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் வருகிறார்கள். ஏன் நாட்டை கட்டியெழுப்புவதற்காகவா மக்கள் அவர்களுக்கு அதிகாரத்தை கொடுப்பார்களா ரணில் விக்ரமசிங்க மற்றும் மகிந்த ஆகிய இரண்டு தரப்பினரும் முன்னர் ஒருவருக்கு ஒருவர் போரிடும் எதிரிகளாக தெரிந்தார்கள். தற்போது அவர்கள் இருவரும் ஒரே அரசாங்கத்தில் இருக்கிறார்கள்.மகிந்த, கோட்டாபய, பசில், அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட பலர் குற்றவாளிகள். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூட குற்றவாளி. நீதிமன்றத்தில் அபராதம் விதித்துள்ளனர். இவ்வாறான ஆட்சியாளர்களின் இருப்பதை நினைத்து நாட்டு மக்கள் வெட்கப்பட வேண்டும்.என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement