• Apr 18 2026

மகிழ்ச்சியாக கொண்டாடிய புத்தாண்டு தண்ணீர் திருவிழா; கண்ணீராக மாறிய சோகம்!

shanu / Apr 17th 2026, 3:44 pm
image

தாய்​லாந்​தில் நடை​பெற்ற புத்தாண்டு திருவிழாவின் ஒரு பகுதியான  தண்ணீர் திருவிழா​வில்  வீதி விபத்​துகளில் சிக்கி 3 நாளில் 191 பேர் உயி​ரிழந்​துள்​ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


தாய்​லாந்து நாட்டு மக்​களின் புத்​தாண்டு சோங்க்ரான் என்று அழைக்கப்படுகின்றது. தாய்லாந்தின்  தேசிய புத்​தாண்டு ஆண்​டு​தோறும் ஏப்​ரல் 9 ஆம் திகதி கொண்​டாடப்​படு​கிறது. 


அதற்கமைய சோங்க்​ரான் மத சடங்​கு​கள், பாரம்​பரிய நடனங்​கள், இசை மற்​றும் விருந்துகளுடன் கொண்​டாடப்​படு​கின்​றன. 


சோங்க்​ரான் நீர் திரு​விழா​வின்போது, பழையன கழித்​து விட்​டு, புதி​யதை வரவேற்​கும் அடை​யாள​மாக மக்​கள் ஒருவர் மீது ஒரு​வர் தண்​ணீரைத் தெளித்​துக் கொள்வார்கள். 


தமிழ் புத்​தாண்டு கொண்​டாட்​டங்​களைப் போல​வே, தாய்​லாந்து மக்​கள் சோங்க்​ரான் திருவிழாவின்போது கோயில்​களுக்கு சென்று வழி​பாடு நடத்துகின்​றனர்.


இந்​நிலை​யில் இந்​தத் திரு​விழா கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமானது. நாடு முழுவதும் பல்​வேறு இடங்​களில் இந்தத் தண்​ணீர் திரு​விழா கடந்த 4 நாட்​களாக நடைபெற்று வரு​கின்றது. 


குறித்த விழாவிற்கு செல்லும்போது  3 நாளில் சுமார் 951 வீதி விபத்​துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்துக்களில் சிக்கி  191 பேர் உயி​ரிழந்​துள்​னதாகவும் மேலும் 911 பேர் காயமடைந்து வைத்தியசாலை​யில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. 


புத்தாண்டு கொண்டாட்டத்தில் உயிரிழப்புக்களும் காயங்களும் ஏற்பட்ட சம்பவம் அந்நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மகிழ்ச்சியாக கொண்டாடிய புத்தாண்டு தண்ணீர் திருவிழா; கண்ணீராக மாறிய சோகம் தாய்​லாந்​தில் நடை​பெற்ற புத்தாண்டு திருவிழாவின் ஒரு பகுதியான  தண்ணீர் திருவிழா​வில்  வீதி விபத்​துகளில் சிக்கி 3 நாளில் 191 பேர் உயி​ரிழந்​துள்​ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய்​லாந்து நாட்டு மக்​களின் புத்​தாண்டு சோங்க்ரான் என்று அழைக்கப்படுகின்றது. தாய்லாந்தின்  தேசிய புத்​தாண்டு ஆண்​டு​தோறும் ஏப்​ரல் 9 ஆம் திகதி கொண்​டாடப்​படு​கிறது. அதற்கமைய சோங்க்​ரான் மத சடங்​கு​கள், பாரம்​பரிய நடனங்​கள், இசை மற்​றும் விருந்துகளுடன் கொண்​டாடப்​படு​கின்​றன. சோங்க்​ரான் நீர் திரு​விழா​வின்போது, பழையன கழித்​து விட்​டு, புதி​யதை வரவேற்​கும் அடை​யாள​மாக மக்​கள் ஒருவர் மீது ஒரு​வர் தண்​ணீரைத் தெளித்​துக் கொள்வார்கள். தமிழ் புத்​தாண்டு கொண்​டாட்​டங்​களைப் போல​வே, தாய்​லாந்து மக்​கள் சோங்க்​ரான் திருவிழாவின்போது கோயில்​களுக்கு சென்று வழி​பாடு நடத்துகின்​றனர்.இந்​நிலை​யில் இந்​தத் திரு​விழா கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமானது. நாடு முழுவதும் பல்​வேறு இடங்​களில் இந்தத் தண்​ணீர் திரு​விழா கடந்த 4 நாட்​களாக நடைபெற்று வரு​கின்றது. குறித்த விழாவிற்கு செல்லும்போது  3 நாளில் சுமார் 951 வீதி விபத்​துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்துக்களில் சிக்கி  191 பேர் உயி​ரிழந்​துள்​னதாகவும் மேலும் 911 பேர் காயமடைந்து வைத்தியசாலை​யில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் உயிரிழப்புக்களும் காயங்களும் ஏற்பட்ட சம்பவம் அந்நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement