• Sep 03 2026

எதிர்க்குரல்களை அடக்குவதிலேயே NPP அரசு கவனம் – சுகாஸ் குற்றச்சாட்டு

Chithra / Sep 2nd 2026, 3:42 pm
image

 

 

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும், அவர்களை சட்டத்தின் முன் கொண்டுசென்று அடக்குவதிலுமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முழுமையான செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக தமிழ் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.


யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று (2) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில் -


தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், ஊழல் ஒழிப்பு, போதை ஒழிப்பு என பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கூறியிருந்தது. 


ஆனால், நடைமுறையில் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாத தரப்பினரையும், எதிர்க்கருத்துக்களை முன்வைப்பவர்களையும் கட்டுப்படுத்துவதற்கே அரசாங்கம் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றது.


குறிப்பாக அரச அதிகாரிகள் முதல் ஓது அமைப்புகள் வரை அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்கள் மற்றும் தமது கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும், அவர்களை பல்வேறு வழிகளில் முடக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதும் தொடர்கின்றன.


மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி, நாட்டில் ஜனநாயக சூழலை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, தமக்கு எதிரான குரல்களை அடக்குவதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது.


அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை ஜனநாயகத்துக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.


எனவே, அரசாங்கம் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துக்களையும் ஜனநாயக ரீதியாக எதிர்கொண்டு, மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும் எனவும் கனகரத்தினம் சுகாஸ் வலியுறுத்தினார்.

எதிர்க்குரல்களை அடக்குவதிலேயே NPP அரசு கவனம் – சுகாஸ் குற்றச்சாட்டு   தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும், அவர்களை சட்டத்தின் முன் கொண்டுசென்று அடக்குவதிலுமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முழுமையான செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக தமிழ் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று (2) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில் -தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், ஊழல் ஒழிப்பு, போதை ஒழிப்பு என பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கூறியிருந்தது. ஆனால், நடைமுறையில் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாத தரப்பினரையும், எதிர்க்கருத்துக்களை முன்வைப்பவர்களையும் கட்டுப்படுத்துவதற்கே அரசாங்கம் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றது.குறிப்பாக அரச அதிகாரிகள் முதல் ஓது அமைப்புகள் வரை அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்கள் மற்றும் தமது கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும், அவர்களை பல்வேறு வழிகளில் முடக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதும் தொடர்கின்றன.மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி, நாட்டில் ஜனநாயக சூழலை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, தமக்கு எதிரான குரல்களை அடக்குவதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது.அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை ஜனநாயகத்துக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.எனவே, அரசாங்கம் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துக்களையும் ஜனநாயக ரீதியாக எதிர்கொண்டு, மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும் எனவும் கனகரத்தினம் சுகாஸ் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement