• Apr 27 2024

நாட்டில் சடுதியாக அதிகரித்துள்ள ஆசிரியைகளின் எண்ணிக்கை..!

Chithra / Feb 18th 2024, 2:19 pm
image

Advertisement

 

நாட்டில்  ஆசிரியர்களை விட ஆசிரியைகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளில் பணிபுரியும் ஆண் ஆசிரியர்களை விட பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாகும்.

இது தொடர்பில் குருநாகல் மாவட்ட சிரேஷ்ட கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம்.பாலசூரிய  தெரிவிக்கையில்,

நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை 236,738, 

அவர்களில் 56,817 பேர் ஆண் ஆசிரியர்கள் மற்றும் 179,921 பேர் பெண் ஆசிரியர்கள். பெண் ஆசிரியர்களின் தொகை 76 சதவீதமாக உள்ளது.

396 தேசிய பாடசாலைகளும் 9,730 மாகாண பாடசாலைகளும் உள்ளடங்கலாக தற்போது 10,126 பாடசாலைகள் இருப்பதாக கல்வி அமைச்சின் சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இவற்றில் சுமார் 1,473 பாடசாலைகளில் 50இற்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்.  சுமார் 34 பாடசாலைகளில் 4,000 மாணவர்களுக்கும் அதிகமாக உள்ளனர்.

இதேவேளை, கல்வி அமைச்சு இந்த ஆண்டுக்கான அரசாங்கப் பாடசாலைகளின் தரம் ஒன்றிற்கு புதிய மாணவர்களை பெப்ரவரி 22ஆம் திகதி சேர்த்துக்கொள்ளவுள்ளது.

அரசாங்கப் பாடசாலைகளில் தரம் ஒன்றில் சுமார் 350,000 மாணவர்கள் இவ்வருடம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சடுதியாக அதிகரித்துள்ள ஆசிரியைகளின் எண்ணிக்கை.  நாட்டில்  ஆசிரியர்களை விட ஆசிரியைகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளில் பணிபுரியும் ஆண் ஆசிரியர்களை விட பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாகும்.இது தொடர்பில் குருநாகல் மாவட்ட சிரேஷ்ட கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம்.பாலசூரிய  தெரிவிக்கையில்,நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை 236,738, அவர்களில் 56,817 பேர் ஆண் ஆசிரியர்கள் மற்றும் 179,921 பேர் பெண் ஆசிரியர்கள். பெண் ஆசிரியர்களின் தொகை 76 சதவீதமாக உள்ளது.396 தேசிய பாடசாலைகளும் 9,730 மாகாண பாடசாலைகளும் உள்ளடங்கலாக தற்போது 10,126 பாடசாலைகள் இருப்பதாக கல்வி அமைச்சின் சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.இவற்றில் சுமார் 1,473 பாடசாலைகளில் 50இற்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்.  சுமார் 34 பாடசாலைகளில் 4,000 மாணவர்களுக்கும் அதிகமாக உள்ளனர்.இதேவேளை, கல்வி அமைச்சு இந்த ஆண்டுக்கான அரசாங்கப் பாடசாலைகளின் தரம் ஒன்றிற்கு புதிய மாணவர்களை பெப்ரவரி 22ஆம் திகதி சேர்த்துக்கொள்ளவுள்ளது.அரசாங்கப் பாடசாலைகளில் தரம் ஒன்றில் சுமார் 350,000 மாணவர்கள் இவ்வருடம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement